பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்த துரந்தர் 2 , முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Durandhar 2,First-Day Box Office Collection :'துரந்தர் 2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபீசில் அதிரடியை காட்டியுள்ளது.
Durandhar 2,First-Day Box Office Collection
Durandhar 2,First-Day Box Office Collection source: google
1 min read

Durandhar 2,First-Day Box Office Collection

ரன்வீர் சிங் -ன் துரந்தர் 2

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'துரந்தர் ரிவெஞ்ச்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபீசில் அதிரடியை காட்டியுள்ளது.

உலகம் முழுவதும் துரந்தர்

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் ரிவெஞ்ச் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் பாகம் 1300 கோடிக்கு மேல் வசூல்

ஏற்கெனவே முதல் பாகம் ரூ. 1300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இதன் காரணமாக இப்படத்தின் 2 ஆம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்கள் திருப்தி, உற்சாகம்

இந்நிலையில் தற்போது துரந்தர் ரிவெஞ்ச் திரைப்படம் அதனை பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் முதல் பாதி மெதுவாக தொடங்கினாலும் அடுத்தடுத்த காட்சி நகர்வுகள் அதிலும் குறிப்பாக இடைவேளைக்கு பிறகு வேகம் அதிகரிப்பதாகவும் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

துரந்தர் 2 பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு

மேலும் கூடுதலாக துரந்தர் 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தியேட்டர் வசூல் மட்டும் ரூ.103 கோடி

அதன்படி, முதல் நாளில் தியேட்டர் வசூலில் மட்டும் ரூ.103 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது இந்திய அளவிலான வசூல் மட்டும் தான்.

சிறப்பு காட்சியில் ரூ. 43 கோடி வசூல்

இதுதவிர பட ரிலீசுக்கு முன்னர் நடைபெற்ற முதல் நாள் சிறப்பு காட்சி மூலம் ரூ. 43 கோடி வசூலித்தது எனவும், முதல் நாளில் மொத்தமாக நிகர வசூல் மட்டும் சுமார் ரூ. 172.63 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தரவுகளை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

முதல் நாள் நிகர வசூல் ரூ. 172.63 கோடி

ஆனாள் நிகர வசூல் ரூ. 172.63 கோடி என உறுதி செய்யப்பட்டால் அல்லு அர்ஜூனின் புஷ்பா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் ஆர்ஆர்ஆர் படங்களுக்கு பிறகு ரிலீசான முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த மூன்றாவது படம் என்ற பெருமையை 'துரந்தர் ரிவெஞ்ச்' பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in