

GV Prakash's 'Happy Raj' movie... release date announced! 2026:
ஜிவி பிரகாஷின் புதிய படம்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள Happy Raj திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளர் To கதாநாயகன்
இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதே ஆண்டில் அவர் நடிப்பில் திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஜோதிகாவுடன் நாச்சியார் திரைப்படம்
இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த நாச்சியார் திரைப்படத்தின் மூலம் ஜிவியின் நடிப்புத்திறமை முழுமையாக வெளிப்பட்டுள்ளதாக பேசப்பட்டது.
ஜிவிக்கு ரசிகர்களின் வரவேற்பு
இதைத்தொடர்ந்து 2019 ஆம் வெளியான சர்வம் தாள மயம் திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் என்ற கோணத்தில் இருந்த ஜிவி பிரகாஷ் -ஐ ரசிகர்கள் கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்றே சொல்லலாம்.
2021 ஆம் ஆண்டு வெளியான ’பாச்சிலர்’ திரைபடத்திற்கு இளைஞர்களிடையே வரவேற்பு அதிகமாக இருந்தது.
பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, சிவப்பு மஞ்சள் பச்சை என ஜிவியின் அனைத்து படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
’கிங்ஸ்டன்’ திரைப்படம்
எனினும், சமீபத்தில், ஜிவியின் தயாரிப்பில் வெளிவந்த கிங்ஸ்டன் என்ற திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. கலவையான விமர்சங்களைப் பெற்றது.
ஜிவியின் ‘ஹேப்பி ராஜ்’
இதைத்தொடர்ந்து ஜிவி நடிக்கும் புதிய படம் தான் ’ஹேப்பி ராஜ்’ . இத்திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான பிரதீப் குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்குகிறார்.
ஜிவி பிரகாஷ்க்கு கதாநாயகியாக கௌரி பிரியா நடித்துள்ளார். அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’ஹேப்பி ராஜ்’ கதைப்பாங்கு
ஜிவி திரைப்படம் என்றால் இளைஞர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அந்தவகையில், இளமைத் துள்ளலுடன், நகைச்சுவை பாணியில் உறவு சிக்கல்களை வெளிப்படுத்தும் விதமாக ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
’ஹேப்பி ராஜ்’ வெளியீட்டுத் தேதி
மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.