தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன்
Jana Nayagan Movie Censor Certificate Issue Update : தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து, பனையூரில் அலுவலகம் திறந்து தொடர்ந்து அரசியல் களங்களில் மக்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தவெக மாநாடு மற்றும் ரோடு ஷோ ஆகியவற்றின் மூலமும் மக்களை சந்தித்து வந்தார்.
இதில் கரூர் மாநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சூழல் தவெக கட்சிக்கும், விஜய்க்கும் அரசியல் பயணத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு கொடுத்து, அழுத்தத்திற்கு உள்ளனாது. இதிலிருந்து, படிப்படியாக மீண்டு வந்த தவெக கட்சியும் விஜயும் பின்னர், ஈரோடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இரண்டு மாநாடுகளை நடத்தி மக்களிடம் மீண்டும் மறுமுகம் காட்டினர்.
ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு
இந்நிலையில்,தவெக தலைவர் விஜயின் இறுதிப்படமாக கருதப்படும் ஜனநாயகன் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தெரிவித்தது. இந்நிலையில், இப்படத்திற்கு டிரைலர் முதலே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தமிழ்நாடு முதல் உலக நாடுகள் வரை இப்படத்தின் டிக்கெட் பட வெளியீட்டிற்கு முன்னரே வசூலை வாரிகுவிக்க ஆரம்பித்தது.
ஆனால், தற்போது படத்தின் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாபெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அதாவது சென்சார் போர்டு வழிமுறையின்படி காட்சிகள் நீக்கப்பட்டு, மியூட் செய்யப்பட்டுள்ளது, இருந்த போதும் மீண்டும் யூ.ஏ சான்றிதழ் குழறுபடி ஏற்பட்டள்ளது. இந்நிலையில், இதற்கு பலவித அரசியல் காரணங்கள் இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் நிலையில், தற்போது வருகிற ஜனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று உறுதிப்படுத்தபட்டிருந்தது. ஆனால், தற்போது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகன் படம் வெளியீடு தேதி தள்ளிவைப்பு
முன்னதாக,ஜனயநாயகன் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில்,ஜனநாயகம் திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்தது.தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. வசூலில் மிகப்பெரிய சாதனைபடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக திரைத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.