Kalidas 2 Movie Release Date : நடிகர் பரத்தின் காளிதாஸ் - 2, ஏப்ரலில் வெளியீடு!

Kalidas 2 Movie Release Date in Tamil : நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Kalidas 2 Movie Release Date Update, starring actor Bharath, has been announced here is full details in Tamil
Kalidas 2 Movie Release Date Update, starring actor Bharath, has been announced here is full details in Tamilsource:google
1 min read

The release date of Kalidas 2, starring actor Bharath, has been announced:

நடிகர் பரத்தின் ’காளிதாஸ்’

Kalidas 2 Movie Release Date in Tamil : 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடிகர் பரத் நடித்த திரைப்படம் ’காளிதாஸ்’. இத்திரைப்படத்தில், பரத் காவல் ஆய்வாளராக நடித்திருந்தார்.

’காளிதாஸ்’ கதைக்களம்

த்ரில்லர் கதையம்சம் கொண்ட இக்கதை களத்தில் அடுத்தடுத்து நடக்கும் மர்மமான கொலைகளை காவல் ஆய்வாளரான பரத் விசாரிக்கிறார். இதனால் காதல் மனைவியுடன் நேரம் செலவிட முடியாமல் போகிறது.

அடுத்தடுத்து ஏற்படும் திருப்பம்

இறுதியில் மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்களுக்கு பின்னால் நடக்கும் மர்மம் என்ன, கொலையாளி யார்? பரத் மனைவி தான் கொலையாளியா? கொல்லப்பட்டவர்களுக்கும், பரத்தின் மனைவிக்கும் என்ன தொடர்பு? அவரது மனநிலை பாதிப்பு கதைக்களத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

ரசிகர்களின் பேராதரவு

இப்படி அடுத்தடுத்த நகர்வுகள் விறுவிறுப்பாக அமைந்ததால் ரசிகர்களிடையே ’காளிதாஸ்’ படத்திற்கு அதீத வரவேற்பு இருந்தது. பரத்திற்கும் காளிதாஸ் சிறந்த படமாக அமைந்தது.

காளிதாஸ் இரண்டாம் பாகம் எப்போது?

இதைத்தொடர்ந்து காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் வந்தாலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காளிதாஸ் -2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் பரத் நடித்துள்ளார். ஸ்கை பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பூவே உனக்காக சங்கீதா

கூடுதல் சிறப்பாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடித்துள்ளார். இதற்குமுன் மலையாளத்தில் ’ஹிருதய பூர்வம்’ என்ற மோகன்லால் படத்தில் நடித்திருந்தார்.

ஏப்ரல் 3-ல் காளிதாஸ் -2

இந்நிலையில் காளிதாஸ் - 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in