
காந்தாரா சாப்டர் 1 விமர்சனம் :
Kantara Chapter 1 Review in Tamil : உலக சினிமாவில் முக்கியமாக கன்னட சினிமா சமீப காலமாக ஒட்டு மொத்தமாக இந்திய சினிமாவை வியக்க வைக்கும் வகையில் படைப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் KGF-யை தொடர்ந்து வெளிவந்து மெகா ஹிட் ஆன காந்தாராவின் ஆதி என்ன என்பதை இயக்குனர் ரிஷப் ஷெட்டி(Rishab Shetty Kantara) காந்தாரா சாப்டர் 1 ஆக இயக்கியுள்ளார்.
கதைக்களத்தின் பின்னணி :
கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலே பாங்கரா பகுதியை சேர்ந்த அரசன் காந்தாரா பகுதியை தாக்கி அங்கிருக்கும் பொருட்களை எடுக்க வருகிறான், அப்போது காந்தாராவை காப்பாற்றும் கடவுள் அவர்களை விரட்டியடித்து, பேராசை பெறும் அரசனை அங்கையே கொல்கிறது. இதிலிருந்த கதைக்களம் உருவாகிறது.
காந்தாராவை இணைக்கும் கதை :
பிறகு, அங்கிருந்து தப்பித்த இளவரசர் இனி காந்தாரா பக்கமே போக கூடாது என்று நிச்சயமான முடிவை எடுக்கிறார். இந்த நிலையில் காந்தாரா பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் புலி-யின் பாதுகாப்பில் ஒரு குழந்தை கிடைக்கிறது, அந்த குழந்தை பெர்மே(ரிஷப் ஷெட்டி) இப்பொழுது, கதை காந்தாரவை இணைக்க தொடங்குகிறது.
ஊரிலிருந்து துரத்துவது :
இதே நேரத்தில் பாங்கரா பகுதிக்கு பெர்மேக்கு போகவேண்டும் என்ற ஆசை வருகிறது. அந்த நேரத்தில் பாங்கராவில் தற்போது இருக்கும் அரசன் பொழுதுப்போக்கு வேட்டைக்கு காந்தாரா வர, அங்கிருந்து அவர்கள் பெர்மே-வால் துரத்தி அடிக்கப்படுகிறார்.
அதை தொடர்ந்து பெர்மே எப்போதும் ஊர் எல்லையை தாண்ட கூடாது என்ற ஊர் கட்டுப்பாட்டை மீறி, காந்தாரா எல்லையை தாண்டி, பாங்கரா செல்ல, அதன் பின் நடக்கும் மர்மம், காந்தாராவிற்கு இதனால் என்ன ஆனது, மக்கள் என்ன ஆனார்கள், பெர்மே கடவுளை உணர்ந்து மக்களை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
தொடரும் கதாபாத்திரம் :
ரிஷப் ஷெட்டி(Rishab Shetty) பெர்மே கதாபாத்திரத்தில் மொத்த படத்தையும் செதுக்கியுள்ளார், நடிகர், இயக்குனர் என ஒட்டு மொத்த பாரத்தையும் தன் தலையில் தூக்கி சுமையான சுமையாக சுமந்துள்ளார், ஒரு காட்டுப்பகுதி வாழும் மனிதனாக அப்படியே கட்டுமஸ்தான உடலில் மிரட்டியுள்ளார், அதிலும் தெய்வம் அவர் மீது இறங்கும் நேரம் சண்டைக்காட்சிகள் எல்லாம் அச்சு பிருறாமல், அசாத்திய அசுரத்தனத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
துல்லியமான நடிப்பில் கதாபாத்திரங்கள் :
மேலும் அனைத்து கதாபாத்திரத்தின் கோணல் மானல்களை அனைவரும் மிக துல்லிியமாக கையாண்டுள்ளனர். இதில் ஜெயராம் உட்பட அனைவரும் கதையயை அடுத்ததொரு பரிமாணத்திற்கு எடுத்து சென்றனர். இவர்களை தாண்டி ருக்மிணி ரிஷப் ஷெட்டியுடன் சிரித்து பேசுகிறார், நடனம் அப்படி இப்படி என கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டில் ருக்மிணி-யும் தன் பங்கிற்கு ரசிகர்களை இருக்கையின் ஓரத்தில் அமர்த்தி விட்டார்.
ஆர்ட் ஒர்க் அசத்தல் :
படத்தின் மிகப்பெரும் பலமே ஆர்ட் ஒர்க் தான், அப்படியே அந்த காலத்தை செட் ஒர்க்கில் கொண்டுவந்து அசத்தியுள்ளனர். அதோடு VFX காட்சிகள் ஹாலிவுட் தரம்.தேவாங்குகள் இடைவேளை வரும் காட்சி, புலி வந்து காப்பாற்றுவது, கிளைமேக்ஸில் அந்த குகையில் வரும் விஷயம் என அனைத்தும் பிரமாண்டத்தின் உச்சம்.காந்தாராவில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டம் அதை அடைய நினைப்பவரை தெய்வம் என்ன செய்யும் என்ற கான்செப்ட்டில் அத்தனை கிளைக்கதைகளை உருவாக்கியது ரிஷப்-ன் புத்திசாலித்தனம் மற்றும் அவரின் கதைக்களத்தின் உணர்ச்சியும் திரைரசிகர்கள திடுக்கிட வைத்துவிட்டது.
வெற்றி கண்டாரா ரிஷப் ஷெட்டி :
இத்தனை அம்சங்கள் படம் முழுவதும் இருந்தும் முதல் பாகத்தில் இருந்த யதார்த்தம் அனைத்து இடங்களிலும் சிறு குறையாகவே இருந்தது. ஆனால், கன்னட சினிமா சமீப காலமாக ஒட்டு மொத்த இந்திய சினிமாவிற்கும் சவால் விட்டு வருகிறது. KGF-யை தொடர்ந்து வெளிவந்து மெகா ஹிட் ஆன காந்தாராவின் ஆதி என்ன என்பதை இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா Chapter one ஆக இயக்கியுள்ளார், இதிலும் ரிஷப் வெற்றி கண்டாரா? பார்ப்போம்.
காந்தாரா சாப்டர் 1 கதைக்களம் :
படத்தின்(Kantara Story in Tamil) ஆரம்பத்திலே பாங்கரா பகுதியை சேர்ந்த அரசன் காந்தாரா பகுதியை தாக்கி அங்கிருக்கும் பொருட்களை எடுக்க வருகிறான், அப்போது காந்தாராவை காப்பாற்றும் கடவுள் அவர்களை விரட்டியடித்து, பேராசை பெறும் அரசனை அங்கையே கொல்கிறது.
அங்கிருந்து தப்பித்த இளவரசர் இனி காந்தாரா பக்கமே போக கூடாது என்று முடிவெடுகிறார், இந்த நிலையில் காந்தாரா பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் புலி-யின் பாதுகாப்பில் ஒரு குழந்தை கிடைக்கிறது, அந்த குழந்தை பெர்மே(ரிஷப் ஷெட்டி).
இதே நேரத்தில் பாங்கரா பகுதிக்கு பெர்மேக்கு போகவேண்டும் என்ற ஆசை வருகிறது. அந்த நேரத்தில் பாங்கராவில் தற்போது இருக்கும் அரசன் பொழுதுப்போக்கு வேட்டைக்கு காந்தாரா வர, அங்கிருந்து அவர்கள் பெர்மே-வால் துரத்தி அடிக்கப்படுகிறார்.
அதை தொடர்ந்து பெர்மே எப்போதும் ஊர் எல்லையை தாண்ட கூடாது என்ற ஊர்கட்டுப்பாட்டை மீறி, காந்தாரா எல்லையை தாண்டி, பாங்கரா செல்ல, அதன் பின் நடக்கும் மர்மம், காந்தாராவிற்கு இதனால் என்ன ஆனது, மக்கள் என்ன ஆனார்கள், பெர்மே கடவுளை உணர்ந்து மக்களை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் விமர்சனம் :
ரிஷப் ஷெட்டி பெர்மே கதாபாத்திரத்தில் மொத்த படத்தையும் செதுக்கியுள்ளார்(Kanthara 2 Movie Review in Tamil), நடிகர், இயக்குனர் என ஒட்டு மொத்த பாரத்தையும் தன் தலையில் தூக்கி சுமையான சுமையாக சுமந்துள்ளார், ஒரு காட்டுப்பகுதி வாழும் மனிதனாக அப்படியே கட்டுமஸ்தான உடலில் மிரட்டியுள்ளார், அதிலும் தெய்வம் அவர் மீது இறங்கும் நேரம் சண்டைக்காட்சிகள் எல்லாம் அசுரத்தனம்.
இதை தாண்டி படத்தில் நடித்த அனைவருமே முழு சிறப்பையும் கொடுத்துள்ளனர், எப்போதும் தண்ணியில் மிதக்கும் சுயபுத்தி இல்லாத ராஜசேகரன் என்கிற அரசர், தன் ராஜ்ஜியம் தன் மகனால் இப்படி சீரழிகிறதே என்ற ஏக்கத்துடன் ஜெயராம் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.இவர்களை தாண்டி ருக்மிணி என்ன அவர் பாட்டுக்கு வருகிறார், ரிஷப் ஷெட்டியுடன் சிரித்து பேசுகிறார், என்று பார்த்தால் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டில் ருக்மிணி-யும் தன் பங்கிற்கு மிரட்டி விட்டார்.
தேவாங்குகள் இடைவேளை வரும் காட்சி, புலி வந்து காப்பாற்றுவது, கிளைமேக்ஸில் அந்த குகையில் வரும் விஷயம் என அனைத்தும் பிரமாண்டத்தின் உச்சம்.காந்தாராவில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டம் அதை அடைய நினைப்பவரை தெய்வம் என்ன செய்யும் என்ற கான்செப்ட்டில் அத்தனை கிளைக்கதைகளை உருவாக்கியது ரிஷப்-ன் புத்திசாலித்தனம்.
மேலும் படிக்க : ‘They Call Him OG’ : முதல் நாள் 150 கோடி : பவன் கல்யாணின் வெற்றி
வணிக ரீதியான வெற்றியா?
இத்தனை அம்சங்கள் படம் முழுவதும் இருந்தும் முதல் பாகத்தில் இருந்த யதார்த்தம் கொஞ்சம் மிஸ்ஸிங், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி பிரமிப்பு என்றாலும் முதல் பாகத்தில் இருந்த ஒரு யதார்த்தம் இல்லை.ஆனால் ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், அஜனீஸ் லோக்நாத் உள்ளிட்டோர் தங்களது வேளையை மிச்சம் வைக்காமல் உச்சத்தில் போய் நிறுத்திவிட்டனர். இதனால் ஒட்டு மொத்தமாக காந்தரா சாப்ட்டர் 1(Kantara Chapter 1) பெரிய அளவில் பேச வில்லை என்றாலும், இந்த படத்தில் உழைத்து களைத்துள்ள ஒவ்வொருவரின் முடிவுக்கு சன்மாணம் கொடுக்கும் வகையில் வணிக ரீதியாக மாபெரும் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
========