

'Karuppu' Movie: Fans Dance Ecstatically in Theaters—Actor Suriya Appeals to Refrain from Filming!
கருப்பு திரைப்படம்: பாக்ஸ் ஆபிஸ் அதிரடி
நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் கடந்த வாரம் உலகமெங்கும் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரூ.147 கோடி வசூல் சாதனை
கருப்பு திரைப்படம் திரைக்கு வந்த முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் சுமார் 147 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்
இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிக முக்கியமான, வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பரவசமடையும் ரசிகர்கள் : சூர்யாவின் கோரிக்கை
'கருப்பு' திரைப்படம் 'கருப்பசாமி' வழிபாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தியேட்டர்களில் படம் பார்க்கும் போது சில ரசிகர்கள் பக்திப் பரவசமடைந்து சாமி ஆடும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருகின்றன.
வீடியோ எடுக்க வேண்டாம், சூர்யா வலியுறுத்தல்
இது குறித்துப் பதிவிட்டுள்ள சூர்யா, "திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பக்திப் பரவசத்துடன் சாமி ஆடுபவர்களை, அங்குள்ள மற்றவர்கள் தயவுசெய்து தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலுதவிக்கு முன்னுரிமை அளியுங்கள்
மேலும், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். தியேட்டர்களில் அப்படி பரவசமடைபவர்களுக்குத் தேவையான முறையான முதலுதவி வசதிகளை உடனடியாக வழங்கி உதவ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தியேட்டர் ஊழியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்
அதே நேரத்தில், அதைச் சுற்றியிருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பதையோ அல்லது வீடியோ எடுப்பதையோ தியேட்டர் ஊழியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கருப்பு படத்திற்கான தடைகள், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி
இறுதியாக, 'கருப்பு' திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக இருந்த பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து, படத்திற்கு முழு ஆதரவு வழங்கி வெற்றிகரமாகத் திரையிட்டு வரும் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் பணியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நடிகர் சூர்யா தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
=====