

கேரள திரைப்பட விருது
Kerala State Film Awards 2025 Winner List Tamil : பல்வேறு பிரிவுகளின் கீழ், 2025ம் ஆண்டுக்கான கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அமைச்சர் சாஜி செரியன் இந்த விருது விவரங்களை வெளியிட்டார். சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்த விருது பிரமயுகம் படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால், சிறந்த நடிகராக தேர்வாகி உள்ளார். சிறந்த நடிகையாக பெமினச்சி பாத்திமா படத்தில் நடித்த ஷம்லா ஹம்சா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். சிறந்த இயக்குநராக சிதம்பரம் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கியவர்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு எத்தனை விருதுகள்
கேரள அரசு தரப்பில் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். தென் இந்தியாவில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை எட்டிய மஞ்சும்மல் பாய்ஸ் எனும் படம் மட்டும் மொத்தம் 9 விருதுகளை வென்றிருக்கிறது.
9 விருதுகள் யாருக்கு
அதில், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு(சிஜூ காலித்), சிறந்த துணைநடிகர்(சவுபின் ஜாகிர்), சிறந்த கலை இயக்கம்(அஜயன் சல்லிசேரி), சிறந்த ஒலிக்கலவை(சிஜின், பசல்), சிறந்த ஒலி வடிவமைப்பு(சிஜின் , அபிஷேக்), சிறந்த பாடலாசிரியர்(வேடன்) மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கியவர் சிதம்பரம் என 9 விருதுகளை வென்றிருக்கிறது.
கேரள அரசு வெளியிட்ட திரைப்பட விருது வென்ற வெற்றியாளர்களின் முழு பட்டியல் (Kerala State Film Awards 2025 Winner List in Tamil) :
சிறந்த நடிகர் : 'பிரம்மயுகம்' படத்துக்காக மம்மூட்டி
சிறந்த நடிகை: 'ஃபெமினிச்சி பாத்திமா' படத்துக்காக ஷம்லா ஹம்சா
சிறந்த இயக்குநர்: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக சிதம்பரம்
சிறந்த குணச்சித்திர கலைஞர் (பெண்): 'நாடன்ன சம்பவம்' படத்துக்காக லிஜோமோல் ஜோஸ்
சிறந்த குணச்சித்திர நடிகர் (ஆண்): சவுபின் ஷாஹிர் ('மஞ்ஞும்மல் பாய்ஸ்') மற்றும் சித்தார்த் பரதன் ('பிரம்மயுகம்')
நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது (ஆண்): 'ARM' மற்றும் 'கிஷ்கிந்தா காண்டம்' படங்களுக்காக டோவினோ தாமஸ் மற்றும் ஆசிப் அலி
நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது (பெண்): 'போகேன்வில்லா' படத்துக்காக ஜோதிர்மயி மற்றும் 'பாரடைஸ்' படத்துக்காக தர்ஷனா ராஜேந்திரன்
சிறந்த அறிமுக இயக்குனர்: 'ஃபெமினிச்சி பாத்திமா' படத்துக்காக ஃபாசில் முகமது
சிறந்த ஒலி வடிவமைப்பு: ஷிபின் மெல்வின் மற்றும் அபிஷேக் நாயர் (மஞ்ஞும்மல் பாய்ஸ்)
சிறந்த இரண்டாவது படம்: 'ஃபெமினிச்சி பாத்திமா'
சிறந்த பிரபலமான திரைப்படம்: 'பிரேமலு'
சிறப்பு ஜூரி பெண்கள்/திருநங்கைகளுக்கான விருது: 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்துக்கா பாயல் கபாடியா
சிறந்த கதை: 'பாரடைஸ்' படத்துக்காக பிரசன்னா விதானேஜ்
சிறந்த திரைக்கதை: 'போகன்வில்லா' படத்துக்காக லாஜோ ஜோஸ் மற்றும் அமல் நீரட்
சிறந்த நடன இயக்குனர்: 'போகன்வில்லா' படத்துக்காக சுமேஷ் சுந்தர், ஜிஷ்ணுதாஸ் எம்.வி.
சிறந்த ஆடை வடிவமைப்பு: 'ரேகசித்ரம்' மற்றும் 'போகன்வில்லா' படங்களுக்காக சமீரா சனீஷ்
சிறந்த ஒப்பனை கலைஞர்: 'போகன்வில்லா' மற்றும் 'பிரம்மயுகம்' படங்களுக்காக ரோனெக்ஸ் சேவியர்
சிறந்த VFX: 'ஏஆர்எம்’
சிறந்த ஒத்திசைவு ஒலி: 'பானி'
சிறந்த இசையமைப்பாளர்: 'போகன்வில்லா' படத்துக்காக சுஷின் ஷ்யாம்
சிறந்த பின்னணி இசை: 'பிரம்மயுகம்' படத்துக்காக கிறிஸ்டோ சேவியர்
சிறந்த ஒளிப்பதிவு: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக ஷைஜு காலித்
சிறந்த பாடலாசிரியர் (ஆண்): 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' மற்றும் 'குத்தந்திரம்' படங்களுக்காக வேடன்
சிறந்த பின்னணி பாடகி: 'அம் ஆ' படத்தின் 'ஆரோரம்' பாடலுக்காக ஜெபா டாமி
சிறந்த பின்னணி பாடகர்: 'ஏஆர்எம்' படத்தின் 'கிளியே' பாடலுக்காக கே.எஸ். ஹரிசங்கர்
சிறந்த ஒலிக்கலவை: ஃபசல் பக்கர், ஷைஜின் மெல்வின் ஹட்டன் (மஞ்ஞும்மல் பாய்ஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக அஜயன் சாலிசேரி
சிறந்த எடிட்டர்: 'கிஷ்கிந்தா காண்டம்' படத்துக்காக சூரஜ் இஎஸ்
சிறந்த கலை இயக்கம்: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்துக்காக அஜயன் சாலிசேரி
சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்): 'பரோஸ்' படத்துக்காக சயோனாரா பிலிப்
சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்): 'பரோஸ்' படத்துக்காக பாசி வைக்கம்.
கேரள அரசு கௌரவித்தல்
கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி இயக்குநர் சிதம்பரம் இப்படத்தின் கதைகளத்ததை மெரூகேற்றி இயக்கி இருந்தார். தென்னிந்திய சினிமாவில் பெரும் வெற்றியையும், வசூலையும் இப்படம் குவித்த நிலையில், தற்பொழுது கேரள அரசின் இந்த விருது கௌரவிப்பால், உலகளாவிய மஞ்சுமல் பாய்ஸ்(Manjummel Boys) ரசிகர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.