
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’.
இப்படத்தின் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்துக் கொண்டு பேசும் போது, சேகர் கம்முலா எப்போதுமே அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்குபவர். தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் பலருடைய இதயங்களில் இடம்பிடித்துள்ளார். அதேபோல், நாகார்ஜுனா தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துகிறார். ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, அவரது அமைதியான நடத்தை மற்றும் அணுகுமுறையிலும் கூட.
’குபேரா’ படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடிப்பது தனுஷால் மட்டுமே முடியும். அவரை மனதில் வைத்தே இந்த கதாபாத்திரத்தை சேகர் கம்முலா எழுதியிருப்பார் என நம்புகிறேன். தெலுங்கு திரையுலகில் யாரேனும் தேசிய விருது வென்றால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். ஆனால், தனுஷுக்கு தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது.
இப்படத்தில் நடிப்புக்காக இன்னொரு தேசிய விருதை வெல்வார் என நம்புகிறேன்.இவ்வாறு சிரஞ்சீவி பேசினார்.