

ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Rajinikanth at Goa International Film Festival 2025 : கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று, திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
குடும்பத்துடன் புறப்பட்ட ரஜினிகாந்த்
இவ்விருதை பெறுவதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
திரைப்பட நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு
இதே விமானத்தில் நடிகை நயன்தாராவும் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் கடந்த 20ம் தேதி துவங்கிய சர்வதேச திரைப்பட விழா, இன்று (28ம் தேதி) நிறைவு பெறுகிறது. இன்று மாலை, இந்திய நாட்டின் முன்னணி திரை கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
இதில், திரைத்துறையில் 50ம் ஆண்டு நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தனகு குடும்பத்துடன் சென்றுள்ள அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயிலர்-2 படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கோவாவில் நடைபெறும் சர்வசேத திரைப்பட விழாவில், எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கின்றனர். அதற்காக நான் கோவாவுக்கு குடும்பத்துடன் செல்கிறேன் என்று கூறினார்.
செங்கோட்டையன் - நோ கமெண்ட்ஸ் பதிலளித்த ரஜினி
மேலும், உங்களின் ஆசீர்வாதத்துடன் நான் இன்னும் சூப்பர் ஸ்டாராக தொடர்கிறேன் என்றும் தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததை பற்றி ரஜினியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘நோ காமெண்ட்ஸ்’ என்று சிரித்தபடி கூறினார்
கணவரை முத்தமிட்டு சென்ற நயன்தாரா
இதே விமானத்தில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க புறப்பட்ட நடிகை நயன்தாராவும் சென்னை விமான நிலையத்துக்கு தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் 2 குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வருகை தந்து விமானநிலைய நுழைவு வாயிலில் தனது கணவரை கட்டி அணைத்து முத்தமிட்டு உள்ளே சென்றார்.
நிகழ்ச்சியில் இறுதி நாளான இன்று இந்திய சினிமாவின் முக்கிய நடிகர். நடிகைகள் அனைவரும் அதில் பங்கேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் விருது பெறுவதற்கு, அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
===============