

சினிமாவின் பொருளாதாரம்
List of Highest-Grossing Tamil Movies : சினிமா என்றால் அன்றில் இருந்து இன்று வரை திரையிடுவது, சினிமா பார்க்க திரையரங்கம் செல்வது டிக்கெட், தயாரிப்பு, வசூல், லாபம், நஷ்டம் என்று பெரிய வணிக தொடக்கத்தில் ஆரம்பமாகி, அதை பன்மடங்குகளாக பொருளாதாரம் ஈட்டும் போட்டியாகவே சினிமா துறை இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா பார்வை
அதன்படி பார்க்கையில், தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிக்கப்பட்டு இயக்கி, அதில் நடிக்கும் நடிகர்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளம், படம் ரிலீஸின்போது அவர்களின் வருகை மற்றும் இதர திரை பிரியர்களின் படம் பார்க்கும் வேகம் என டிக்கெட் விற்பனை முதல் நாளில் இருந்து படத்தின் வெற்றியை குறித்து நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். மேலும், படம் திரையிடப்படம் கடைசி திரையரங்கம் வரை வசூல் கணக்குகளும் முடிவு செய்யப்படுகிறது.
தமிழ் சினமா செலவுகள்
இந்நிலையில், தமிழ் சினிமாவின் வசூல் மற்றும் படத்தின் வெற்றி மற்றும் திரையரங்கில் ஓடும் நாட்கள், என 90 களில் படத்தின் வசூல் மற்றும் வணிக ரீதியாக வெற்றி தந்த சில முக்கிய படங்கள் என அன்றைய பொருளாதார சூழலுக்கு பெருமளவில் வெற்றி கிடைத்தது. அதன்படி, இன்று படங்களின் தயாரிப்பு செலவுகள் போக விரல் விட்டு என்னும் அளவிற்கே படங்களிள் வணிக வெற்றிகள் இருக்கிறது.
1000 கோடி வெற்றி
அதில் 1000 கோடி வசூல் செய்த படங்களில் தமிழ் சினிமாவில் ஒரு சில குறிப்பிட்ட படங்களே குறிப்பிடப்படும் நிலையில், சமீபகால வெளியீட்டில் லோகேஷ் கனகராஜ், இயக்த்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இதர நடிகர்கள் நடித்து வெளிவந்த கூலி திரைப்படம் வணிக அளவில் 600 கோடி வசூல்(Coolie Box Office Collection1000 crore movie in india list) செய்து சாதனை படைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
100 கோடி வசூல்
100 கோடி வசூல் செய்த படங்கள் என்று குறிப்பிட்டால், “கூலி, குட் பேட் அக்லி, டிராகன், விடாமுயற்சி, தலைவன் தலைவி, டியூட், மதராஸி' ஆகிய 7 படங்களை மட்டுமே(100 Crore Collection Tamil Movie List) சொல்ல முடியும். தனுஷ் நடித்து வெளிவந்த 'குபேரா' படம் தமிழில் தோல்வியையும் தெலுங்கில் 100 கோடி வசூலை எட்டியுள்ளது.
50 கோடி வசூல்
இதன் தொடர்ச்சியாக,தயாரிப்பு செலவு அதிகம் இன்றி, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, போதுமான அளவில் அதாவது 50 கோடி வரை வசூல் செய்த படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி, மாமன்' ஆகிய படங்கள் உள்ளன. சில படங்கள் 10 கோடி வசூலில் குறைந்தளவு லாபத்தை எட்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க : வசூலில் உச்சம் தொட்ட காந்தாரா-தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை!
தமிழ் சினிமாவின் 1000 கோடி எதிர்பார்ப்பு
இந்நிலையில், பெருமளவில் தமிழ் சினிமா தயாரிப்புகள் இருந்தாலும், கதைக்களம் மற்றும் நடிகர்கள் என அனைத்திரலும் உயர ரக நட்சத்திர தரங்களை தேர்வு செய்தாலும், படத்தின் வசூல் இன்றும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இயக்குநர்கள் நடிகர்கள் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் மேடைகளில் தமிழ் சினிமாவின் வசூல் குறித்த நிறை, குறை கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் இன்றை கால கட்டத்தில் ஒரு எட்டா கனியாகேவே இருந்து வருகிறது என்றால் மிகையாகது.