

2025 ஆம் ஆண்டு மட்டும் 280 படங்கள்
List Of Tamil Movies 2025 Released in Tamil : சினிமா பிரியர்க்ள என்றால் இனம்,மொழிகளை தாண்டி உலகளவில் அனைவரின் ஒரே திரை மொழியாக திரை ரசிகர்கள் இடையே பிரேவேசித்து வருகிறது.
அதன்படி முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு, 2025 திரைப்பட வெளியீடு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய, ஆண்டு முடிவதற்குள் 280 படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் 6 படங்கள்
இந்த சாதனையை 2026ம் ஆண்டு முறியடித்து அது 300ஐத் தொட்டுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே சினிமா பிரியர்களுக்கு எழுந்துள்ள நிலையில், 2026ம் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 2ம் தேதி “அனலி, டியர் ரதி, மாமகுடம்,ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா,தி பெட்” ஆகிய படங்கள் வெளியாக(January 2026 Released Tamil Movie List) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வேறு எந்த படங்களுக்கும் தியேட்டர்கள் இல்லை
இந்தப் படங்கள் அதிகபட்சமாக ஒரு வாரம்தான் தியேட்டர்களில் இருக்க முடியும் என்று கூறப்படும் நிலையில், அடுத்த வாரம் ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
பொங்கலுக்கு ’ஜனநாயகன், பராசக்தி’
தமிழகத்தில் இருக்கும் அனைத்து ரிலீஸ் தியேட்டர்களிலும் ’ஜனநாயகன், பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகிவிடும்(list of Pongal release Tamil movies 2026). அதனால், வேறு எந்த படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
இரண்டு படங்களின் வரவேற்பைப் பொறுத்து அதற்கடுத்த வாரமான ஜனவரி 16 ஏதாவது படங்கள் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், 2025 ஆம் ஆண்டை விட வருகிற ஆண்டான 2026-ல் அதிக படங்கள் வெளியாகுமா என்று பொறுத்திறுந்துதான் பார்க்கவேண்டும்.