

List of Top 10 Films Trailer 2025 Crossed Million Views : 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு எனக் கூறலாம் . இந்த ஆண்டு கமல், ரஜினி ,அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தன. அதே வேளையில் பல புதுமுக இயக்குனர்களின் படங்களும் வெளிவந்துள்ளது அதிலும், இயக்குநர்கள் நடிகர்களாகவும், நடிகர்கள் இயக்குநர்களாகவும் உருமாறி இந்த ஆண்டு சினிமா சுற்றி வந்துள்ளது.
2025 டிரைலரில் எதற்கு முதலிடம்
திரைப்பட தயாரிப்பாளர்களை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளை அதாவது டிரைலர், டீசர் என வெளியிட்டு விளம்பரம் செய்வது வரை மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் டிரெய்லர் என்பது ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிர வைப்பவையாக மாறி இருக்கின்றன . ஒரு டிரெய்லர் யூடியூப்பில் எத்தனை பார்வைகளை அள்ளுகிறது என்பதை பொறுத்தும் அந்த படத்தின் வெற்றி என்பது தீர்மானிக்கப்படுகிறது.2025ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியாகிய எந்த படத்தின் டிரெய்லர் அதிக பார்வைகளை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
கூலி டிரைலரின் பார்வையாளர்கள்
கூலி: நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக அமைந்தது .லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ரஜினிகாந்த் இணைந்ததால் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மொத்தமாக 54 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்த ஆண்டில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிரெய்லர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தக்லைஃபின் டிரைலர்தக் லைஃப் டிரைலர் வெற்றி
தக் லைஃப்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினமும் கமலும் இணைந்த இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மிக வலுவாக இருந்தது. ஆனால் டிரைலர் அளவிற்கு பட வசூல் பெரும் இடத்தை பிடிக்கவில்லை.
32 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற குட்பேட் அக்லி
குட் பேட் அக்லி: அஜித் குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் 39 மில்லியன் பார்வைகளைப் பெற்றது . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்தது. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிக கவனம் பெற்ற படமாக இருந்தது. யூடியூபில் இதன் டிரெய்லலை 32 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
பன்மொழிகளில் வெளியாகி 26 மில்லியன் பார்வையாளர்கள்
டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் குவித்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றார் என்றால் மிகையாகாது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 26 மில்லியன் பார்வைகளை பெற்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
விடாமுயற்சி பெற்ற 20 மில்லியன் பார்வையாளர்கள்
விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவான விடா முயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் 20 மில்லியன் பார்வைகளை இந்த ஆண்டு அதிகமான பார்வைகளை பெற்ற டிரெய்லர்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
இட்லி கடையும் 20 மில்லியன் பார்வையாளர்கள்
இட்லி கடை: தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் இந்த ஆண்டில் சிறந்த வசூல் படைத்த படங்களில் ஒன்றாக இருக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் வந்த பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் 20 மில்லியன் பார்வைகளை பெற்றது.
மதராஸி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன . இந்த டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
9வது இடத்தில் உள்ள பைசன் டிரைலர்
பைசன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த பைசன் காளைமாடான் திரைப்படத்தின் டிரெய்லர் 17 மில்லியன் பார்வைகளோடு இந்த ஆண்டில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட டிரெய்லர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
10 வது இடத்தில் துல்கர் சல்மான காந்தா
காந்தா: துல்கர் சல்மான் , சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவான பீரியட் டிராமா திரைப்படம் காந்தா .இந்த திரைப்படத்தின் டிரெய்லர் 14 மில்லியன் பார்வைகளைப் பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. இந்த 2025- ஆம் ஆண்டில் முண்ணனி வகித்த டிரைலர் பட்டியலை பார்வையாளர்கள் எண்ணிக்கை வைத்து பிரித்து பார்த்த நிலையில், அடுத்த ஆண்டன் முண்ணனியை பிடிக்கும் படங்களை பொறுத்திறுந்துதான் பார்க்கவேண்டும் .