இவ்ளோதான் பட்ஜெட் ஆனால் 100 கோடி வசூல் : 2025ன் டாப் 5 படங்கள்!

Lowest Budget Films Box Office Collection 100 Crore Movie List : 2025-ஆம் ஆண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில், குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மெகா ஹிட் அடித்த சில திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.
Lowest Budget Films Box Office Collection 100 Crore Movie Top 5 List in Tamil
Lowest Budget Films Box Office Collection 100 Crore Movie Top 5 List in Tamil Google
2 min read

Lowest Budget Films Box Office Collection 100 Crore Movie List : ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கும், திரை பிரியர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான திரைப்படங்கள் ஒருபுறம் இருந்தாலும், சில படங்களின் வெற்றி, ஒரு தரமான கதைக்கு பட்ஜெட் ஒரு தடையே அல்ல என்பதை மீண்டும் உர்ஜிதப்படுத்தியுள்ளது.

குறைந்த செலவு, அதிக லாபம்

நட்சத்திர அந்தஸ்து இல்லாமலும், மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் வசூலைக் குவித்து தயாரிப்பாளர்களுக்கு அதிகம் லாபம் ஈட்டிய டாப் 5 தமிழ்ப் படங்களின் முழு விவரங்களை பார்ப்போம்.

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல்

டூரிஸ்ட் ஃபேமிலி ரூபாய் 7 கோடி முதல் 8 கோடி செலவில் உருவாகி ரூபாய் 90 கோடி வரை லாபம் ஈட்டிய திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், 2025-ன் மிக அதிக லாபம் ஈட்டிய படமாக மாறியது.

தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை மிகவும் யதார்த்தமான நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் டிராமாவாக இப்படம் பேசியது. எளிய மற்றும் மனதிற்கு நெருக்கமான கதைக்களம் குடும்பப் பார்வையாளர்களைக் கவரந்து வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.

வாரிக்குவித்த தலைவன் தலைவி வசூல்

தலைவன் தலைவி: ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி சுருட்டியது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய இந்த அரசியல் கலந்த காதல் மற்றும் குடும்ப நாடகம், வெளியாவதற்கு முன் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.

எனினும், படத்தின் வலுவான வசனங்கள், அழுத்தமான குடும்ப உணர்வுகள் மற்றும் நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு ஆகியவை திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெற காரணமாக அமைந்ததுடன் பிரபலத்துவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பும் பிசிறில்லாமல் கை கொடுத்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்து அசத்தியுள்ளது.

டிராகின் வசூல்

டிராகன்: 100 கோடி நாயகன் என்று டாப் ஹீராவாக வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் ரூபாய் 35 கோடி முதல் 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூபாய் 150 கோடி கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது இப்படம். இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்த, இந்த க்ரைம் காமெடி டிராமா, இளைஞர்களின் பல்ஸ் அறிந்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது.

இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிதி மோசடி மற்றும் தனிப்பட்ட உறவுச் சிக்கல்களைப் புதிய கோணத்தில் நமக்கு வெளிக்காட்டியது பாராட்டுக்குரியது. பட்ஜெட் அளவில் இது மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது என்றால் அதில் எந்த மாற்றமும் இல்லை.

குடும்பஸ்தன் குதூகலமான வெற்றி

ரூபாய் 8 கோடி முதல் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வளர்ந்து வரும் முண்ணனி நடிகர் மணிகன்டன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம்.. ரூபாய் 30 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்தப் படம், நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், வேலை இழப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் குறித்த உணர்ச்சிபூர்வமான நாடகமாக அமைந்தது. நட்சத்திர அந்தஸ்தை நம்பாமல், கதையின் வலிமையையும், யதார்த்தமான பாத்திரப் படைப்பையும் மட்டுமே நம்பி இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் வசூலை ஈட்டி லாபம் பார்த்த லிஸ்ட்டில் இந்த ஆண்டு குடும்பஸ்தனும் அங்கம் வகிக்கிறது.

மாமன் படத்தின் வசூல் வெற்றி

நடிகர் சூரி எழுதி நடித்து ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்தது. கிராமப்புறப் பின்னணியில் உருவான இந்த எமோஷனல் டிராமா, தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

கிராமத்து மனிதர்களின் உணர்வுகளை எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் ரசிகர்களை கலப்படம் இல்லாமல் தழுவிய இப்படம், நகர்ப்புற ரசிகர்களையும், கிராமப்புற ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்தது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் லாபத்தை அள்ளியதன் மூலம், உள்ளூர் மண் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in