மாதவன் நடிப்பில் ஜி.டி. நாயுடு பயொபிக் 'வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்' : விரைவில் திரைக்கு வருகிறது...

இந்தியாவின் எடிசன்னு சொல்லபட்ற ஜி.டி. நாயுடுவோட பயொபிக் படம் மாதவன் நடிப்பில் GDN. படம் விரைவில் திரைக்கு வருகிறது
Madhavan's G.D. Naidu biopic to hit screens soon
Madhavan's G.D. Naidu biopic to hit screens soon google
1 min read

விரைவில் திரைக்கு வரும் பயோபிக் படம்

ஆர். மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி வரும் படம் GDN. 'இந்தியாவின் எடிசன்' என்றும் 'வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்' என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் திரைக்கு வருகிறது

விறுவிறுப்பில் பட நிறைவு வேலைகள்

இந்த பயோபிக் படத்திற்கான நிறைவு பணிகள் விரைவில் முடிந்து திரைக்கு வரும் என்று திரைபொபட குழு தெரிவித்துள்ளது

கவனம் ஈர்த்த திரைப்பட போஸ்டர்

ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவனின் தோற்றத்தை முன்பே போஸ்டராக திரைப்பட குழு வெளியிட்டிருந்தது , தற்போது இது திறையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது

முக்கிய திரைபிரலங்கள் இணைந்த படம்

இப்படத்தில் மாதவனுடன் முக்கிய கதாப்பாத்திரங்களாக சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் போன்றோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் திரைப்படக்குழு

படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் திரைப்படக்குழ் விறுவிறுப்பாக ஈடுப்பட்டு வருகிறது .

தேசிய விருது வென்ற 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ஜூலையில் வெளியாகும் படம்

அனைத்து பணிகளும் முடிந்து , இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in