

300 கோடி பட்ஜெட்டில் ஜனநாயகன்
Jana Nayagan Audio Launch Malaysia Date and Time in Tamil : விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
விஜயின் கடைசி படம்
இது விஜயின் கடைசி படம். மேலும், முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்க்கான படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.300 கோடி பட்ஜெட்
கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு மட்டும் ரூ.275 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் படக்குழு - மலேசியா எச்சரிக்கை
ஜனநாயகன் படம் குறித்த இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது என படக்குழு தரப்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு அறிவித்தனர். இதற்கு 3 நாட்களே மீதம் உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் மட்டுமின்றி அரசியல் வருகைக்கான பிரச்சார மேடையாக இந்த இசை வெளியீட்டு விழாவை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இசைவெளியீட்டு விழாவிற்கு கண்டிஷன்
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக மலேசியா காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பல விதமான கட்டுப்பாடுகளை படக்குழுவினருக்கு விதித்துள்ளனர். அது என்ன என்றால், இந்த இசை வெளியீட்டு விழாவை ஜன நாயகன் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவாக மட்டுமே நடத்த வேண்டும்.
அரசியல் மேடையாக இருக்கத் தடை
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சிக்கான மேடையாக பயன்படுத்தக் கூடாது. கட்சிக் கொடியை பயன்படுத்தவும் கூடாது. அரசியல் வசனங்கள், உரை என்று எதுவும் இடம் பெறக் கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வெறும் தகவல் மட்டுமே தவிர இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கட்சிகளின் அரசியல் அழுத்தம் இருக்கக்கூடும்
மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்க மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் ரசிகர்களின் கூட்டல் அலை மோதும்.
இதன் காரணமாக உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு கூடா வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் தான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தவில்லை என்றும் மற்ற கட்சிகளின் அரசியல் அழுத்தமும் இருக்க கூடும் என்பதால் தான் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஜனநாயகன் படக்குழு
ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், ரெபேகா மோனிகா ஜான், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபா பாஸ்கர், ரேவதி, நிழல்கள் ரவி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பல காட்சிகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கின்றது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும், கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
1000 கோடியை தொடும் என்று எதிர்பார்ப்பு
இந்தப் படத்திற்கு எதிர் போட்டியாக இப்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் அடுத்த நாள் வெளியாக இருக்கிறது. முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஜனவரி 10ஆம் தேதியே படத்தை வெளியிட இருப்பதாக பாராசக்தி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால், இருபடங்களின் வசூல் குறித்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என யூகிக்கப்படும் நிலையில், விஜயின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் வசூல் ரூ.1000 கோடியை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.