’Hiphop’ தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2 ரிலீஸ் தேதி அப்டேட்!

இயக்குநரும்,நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு - 2' படத்தின் ரிலீஸ் தேதி நாளை மாலை 5 மணிக்கு அறிவிப்பு.
'Meesaya Murukku 2' will be announced tomorrow at 5 PM.
'Meesaya Murukku 2' will be announced tomorrow at 5 PM.google
1 min read

The release date for director-actor Hiphop Tamizha Adhi's film 'Meesaya Murukku 2' will be announced tomorrow at 5 PM.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கியுள்ள ‘மீசைய முறுக்கு - 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

9 ஆண்டுகளை நிறைவு செய்த மீசைய முறுக்கு முதல் பாகம்

2017-ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து, கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘மீசைய முறுக்கு’. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ஆதி, அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிரார்.

மீசைய முறுக்கு - 2 அறிவிப்பு

இந்நிலையில், 'மீசைய முறுக்கு' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு நாளை (ஜூலை 23) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

‘மீசைய முறுக்கு - 2’ படத்தின் சிறப்பம்சங்கள்

நடிகை குஷ்பு சுந்தரின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் தான் மீசைய முறுக்கு -2 படத்தை தயாரித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதியுடன் கேத்திகா ஷர்மா, பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே ஹிட் அடித்த ‘மீசைய முறுக்கு - 2’ பாடல்கள்

இப்படத்தில் இடம்பெற்ற 'ஆரா', '10/10' ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரிய ஹிட் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மத்தியில், இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள 'மீசைய முறுக்கு 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ஆதியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in