
Actor Mohanlal Daughter Vismaya Mohanlal: மலையாள சினிமாவின் நட்சத்திர நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் திரையுலகில் அறிமுகமாகி கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களை செய்துவருகிறார்.
இந்தநிலையில் மகள் விஸ்மயாவும் சினிமாவில் கால் பதிக்கிறார். கதாநாயகியாக விஸ்மயா அறிமுகமாகும் படத்திற்கு துடக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘2018’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி இந்த படத்தை இயக்குகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
நாயகியாக அறிமுகமாகும் விஸ்மயாவுக்கு மலையாள திரையுலகினரும் மோகன்லால் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.