நடிகர் அஜித்தின் 'AK 64' அதிகாரப்பூர்வ அறிவிப்பு: தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி! உற்சாகத்தில் 'AK' ரசிகர்கள்!

நடிகர் அஜித்தின் 64-வது படமான 'டேர் டெவில்' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Official announcement regarding Actor Ajith's 'AK 64': Shalini steps in as producer! AK fans are thrilled!
Official announcement regarding Actor Ajith's 'AK 64': Shalini steps in as producer! AK fans are thrilled!source:google,ai
1 min read

Actor Ajith's 64th film, 'Dare Devil', has been officially announced.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், ரேசருமான அஜித் குமாரின் 64-வது திரைப்படம் (AK64) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காத்திருப்புக்கு பின் வந்த அப்டேட்

'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் மீண்டும் நடிப்பது ஏற்கனவே உறுதியாகியிருந்தது. இருப்பினும், அந்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் 'ஏகே 64' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.

சரியான தயாரிப்பாளர்கள் அமையாததே இந்த தாமதத்திற்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவித்து வந்தன.

ரசிகர்களின் நெடுநாள் காத்திருப்பு

ரசிகர்களும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எப்போது அறிவிப்பு வரும் என காத்துக்கிடந்தனர். இந்நிலையில், தற்போது ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித் குமாரின் 64-வது திரைப்படதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு விவரம்

’AK64’ திரைப்படத்திற்கு "டேர் டெவில்" (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் பிரச்சனையால் தான் இத்தனை நாட்கள் படம் குறித்த அறிவிப்பு தள்ளிப்போன நிலையில் தற்போது குடுதல் சிறப்பாக நடிகரும், ரேசருமான அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தான் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு

'பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ்' (Brave Hearts Productions) என்ற புதிய நிறுவனத்தின் பேனரில் ஷாலினி அஜித் குமார் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். எப்போதும் போல அஜித்தின் இந்த படத்திற்கும் பிரபல ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜுக்கு மணிமண்டபம் : சென்னை கலைவாணர் அரங்கில் 'ராஜகோபுரங்கள்' விழா!

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in