

பொங்கல் திரைப்பட கொண்டாட்டம்
Pongal Release Movies 2026 List in Tamil : திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். அந்த நாட்களில் புதுப் படங்கள் திரையரங்கில் வெளியாகி திரைங்கம் விழாக்கோலம் புகும்.
அந்த வரிசையில் பொங்கல், தீபாவளி என்றால், திரையரங்கில் பெருங்கூட்டமே இருக்கும்.அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரிசையாக விடுமுறை வருவதால் புதுப்படங்களும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன.
ஜனநாயகன் திரைப்படம்
இதில் முதன்மையில் 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மதன் கெளரி, புஸ்ஸி ஆனந்த், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தணிக்கை சான்று குளறுபடியால் சிக்கல்
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.ஜனவரி 9 ஆம்தேதி ஜனநாயகன் படம் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் தணிக்கை சான்றிதழில் குளறுபடி ஏற்பட்டு, படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது,
இருந்தபோதும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் இருப்பதால், அதற்குள் படம் வெளிவருமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பராசக்தி திரைப்படம் வெளியீடு
சிவகார்த்திகேயனின் 25வது படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
மேலும் அதர்வா முரளி, ரவி மோகன், பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து உள்ளார். இப்படம் ஜனவரி 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தி ராஜா சாப் திரைப்படம்
தி ராஜா சாப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள பான் இந்தியா படம் தான் தி ராஜா சாப். இப்படத்தை மாருதி இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கிறார்.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முதல் ஹாரர் காமெடி படம் இதுவாகும்.
இப்படம் தெலுங்கில் உருவாகி இருந்தாலும், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.
ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
1.தி க்ரோனாலஜி ஆஃப் வாட்டர் (ஆங்கிலம்) 2. கிரீன்லாந்து 2 : மைக்ரேஷன் (ஆங்கிலம்) 3(Pongal Release Movie List 2026 in Tamil). சாங் சங் ப்ளூ (ஆங்கிலம்) 4. ப்ரைமேட் (ஆங்கிலம்)
5. வெள்ளப்பம் (மலையாளம்) 6. ஜெய் கன்னையா லால் கி (குஜராத்தி) 7. நாரி சரித்ரோ பெஜாய் ஜோடில் (பெங்காலி) 8. கீர்த்தனேர் போர் கீர்த்தன் (பெங்காலி)
9. ஃபாதோ ஆஹ் பகவான் 2 (சிந்தி) 10. டாங் ஷிடெங் போர் (காசி) 11. லாலோ : ஸ்ரீ கிருஷ்ண சதா சஹாயதே (குஜராத்தி படம்) 12. கிஸ் கிஸ்கோ பியார் கரேன் 2 (இந்தி படம்)
========================