தொடங்கியது பிரதமர் மோடியின்‘மா வந்​தே’ படம்- வைரலாகும் புகைப்படம்!

PM Narendra Modi Biographical Film Maa Vande Movie Update in Tamil : பிரதமர் நரேந்​திர மோடி​யின் வாழ்க்கை வரலாற்றை மைய​மாக கொண்ட ‘மா வந்​தே’ ‘பயோ பிக்’ படப்​பிடிப்பு தொடங்கி உள்​ளது.
Prime Minister Narendra Modi's 'Maa Vande' film has begun - the photo is going viral!
Prime Minister Narendra Modi's 'Maa Vande' film has begun - the photo is going viral!Google
1 min read

மா வந்​தே படம் குறித்த அப்டேட் வெளியீடு

PM Narendra Modi Biographical Film Maa Vande Movie Update in Tamil : பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாகவும் அதில் நடிக்கவிறுக்கும் நடிகர் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இதன் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தாலும், சினிமா வட்டாரங்கள் மத்தியில் இதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில், தற்போது இதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகி படம் குறித்த முந்தைய அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்​டம்​பர் மாதம் 17-ம் தேதி பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை கொண்​டாடி​னார். அப்​போது, அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்​பட​மாக ‘மா வந்​தே’ உரு​வாக்​கு​வது குறித்த அறி​விப்பு வெளி​யானது. திரைப்​படத்தை ‘சில்​வர் காஸ்ட் கிரியேஷன்​ஸ்’ வீர் ரெட்டி தயாரிக்​கிறார்.

படபூஜை புகைப்படங்கள் வெளியாகி வைரல்

முன்னதாக வெளிவந்த தகவலில் பிரதமர் மோடி​யாக மலை​யாள நடிகர் உன்னி முகுந்​தன் நடிக்​கிறார். படத்தை கிராந்தி குமார் இயக்​கு​கிறார். இப்​படத்​துக்கு ரவி பஸ்​ரூர் இசையமைக்​கிறார். இந்த படத்​தின் படப்​பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்​ளது. இது குறித்த புகைப்​படங்​கள் வெளி​யாகி இணை​யத்​தில் வைரலாகி வரு​கின்​றன. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தன் தாய் மீது வைத்த பாசமே படத்தின் மைய கரு

இதைத்தொடர்ந்து, இந்​தப் படம் இந்​திய அளவில் ஆங்​கிலம் உள்​ளிட்ட பல மொழிகளில் வெளி​யாக உள்​ளது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் இருந்து நாட்​டின் பிரதமர் வரை உயர்ந்த மோடி​யின் வாழ்க்​கையை இந்த திரைப்​படம் உண்மை சம்​பவங்​கள் மற்​றும் உணர்​வுப்​ பூர்​வ​மான நிகழ்ச்​சிகளை வெளிப்​படுத்​தும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக பிரதமர் மோடி​யின் வெற்​றிக்கு அடித்​தள​மாக இருந்த அவரது தாயார் ஹீராபென்​னிடம் பிரதமர் மோடி வைத்​திருந்த பாசம், மரி​யாதை போன்​றவை இத்​திரைப்​படத்​தில் உணர்​வுப்​பூர்​வ​மாக எடுத்​துரைக்​கப்​பட உள்ளது என படக்குழு தரப்பில் தகவல் வெளிவந்து்ளளது. தற்போது படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் ஓராண்டுக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in