துரந்தர் திரைப்படம்
Dhurandhar Movie Collection Worldwide Till Now : ரன்வீர் சிங், ஆர்.மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள துரந்தர் திரைப்படத்தை, பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஆதித்ய தர் இயக்கியிருக்கிறார். தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன், ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.ஆரம்பம் முதலே இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இப்படத்தின் டீசர் வெளியீட்டிற்கு பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்து, சினிமா பிரியகர்களிடையே வரவேற்க்கப்பட்டது.
1000 கோடி வசூல் செய்த துரந்தர்
1999-இல் நடந்த IC-814 விமானக் கடத்தல், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் சில காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், வன்முறை காட்சிகள் மிகக் கொடூரமாக இருப்பதாக விமர்சகர்கள் கூறினர். ஆனால் இது படத்தின் வசூலை சிறிதளவு கூட பாதிக்கவில்லை. உலகளவில் ஆயிரத்து ஆறு கோடி ரூபாய் வசூல் குவித்திருக்கிறது துரந்தர் திரைப்படம். இந்தியளவில் மட்டும் துரந்தர் திரைப்படம் சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
துரந்தர் வசூல் எதிர்பார்ப்பு
வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படமாக சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் கொடுத்த திரைப்படம் துரந்தர். அந்த வகையில் 'ஏ' சான்றிதழ் பெற்று அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் திரைப்படமாக துரந்தர் அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக, அனிமல் திரைப்படம் இதேபோன்று 'ஏ' சான்றிதழ் வாங்கினாலும் 900+ கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
தற்போது இப்படமும் ஏ சான்றிதழ் பெற்றும், வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில், வெளிவந்த வெறும் ஒரு மாதங்களே ஆகியுள்ளதால், படத்தின் திரை வசூல் மற்றும் ஓடிடி என இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.