

Rashmika Mandanna and Vijay Deverakonda's wedding pic new record:
"Virosh" திருமணம்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு உதய்பூரில் கடந்த வியாழக்கிழமை காலை சரியாக 10.10 மணிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இன்ஸ்டாவை ஆக்கிரமித்த Virosh புகைப்படங்கள்
திருமணம் புகைபடங்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இருவருமே திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.
லைக்ஸ் மூலம் சாதனை
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது. இதன்மூலம் தங்கள் திருமண புகைப்படங்களின் மூலமாக ஓர் சாதனையையும் நிகழ்த்தியுள்ளனர்.
3 மணிநேரத்தில் 29.9 மில்லியன் லைக்ஸ்
திருமண புகைபடங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 3 மணி நேரத்தில் 29.9 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.
இதில் விஜய் தேவரகொண்டாவின் பதிவு மட்டும் 13.6 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.
அதேபோல் ராஷ்மிகா மந்தனாவின் பதிவு 16.3 மில்லியனாக உயர்ந்து, இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சாதனையை முறியடித்த ஜோடி
இதில் என்ன சாதனை இருக்கிறது எனக்கேட்டால் , இதற்கு முன்பு அதிக லைக்குகளைப் பெற்ற இந்திய திரைப் பிரபலங்களின் சாதனையை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா முறியடித்துள்ளனர்.
இந்திய திரைப் பிரபலங்களின் சாதனை
முன்னதாக கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரின் திருமணப் பதிவுகள் 27.5 மில்லியன் லைக்குகளைத் தாண்டியிருந்தன.
கியாரா அத்வானியின் பதிவு மட்டும் 15.7 மில்லியன் லைக்குகளைப் பெற்றது, அதே நேரத்தில் சித்தார்த்தின் திருமணப் பதிவு 11.8 மில்லியன் லைக்குகளைப் பெற்றிருந்தது.
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணப் புகைப்படங்கள் 14 மில்லியன் லைக்குகள்.
கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் 12.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள்.
அதியா ஷெட்டி மற்றும் கே.எல். ராகுல் 8.3 மில்லியன் லைக்குகள்.
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி தம்பதியின் தங்கள் திருமணப் பதிவுகளுக்கு சுமார் 7.8 மில்லியன் லைக்குகள்.
தற்போது இந்த திரைப் பிரபலங்களின் சாதனையை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா தம்பதியினர் முறியடித்துள்ளனர்.
ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணப் புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் விரும்பப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவாக விராட் கோலியின் 2024 டி20 உலகக் கோப்பைப் வெற்றிப் படத்தின் சாதனையையும் முறியத்துள்ளது.
மேலும் உலக அளவில் அதிகம் விரும்பப்பட்ட இருபது பதிவுகளிலும் ராஷ்மிகாவின் திருமண பதிவு இடம்பெற்று உள்ளது.