

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்
Rashmika Mandanna Vijay Deverakonda Marriage : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா தம்பதியினர் பின்தங்கிய 44 அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்த திருமணம்
நட்சத்திர ஜோடிகளின் திருமணம் என்றாலே கோலாகலம் தான். அதிலும் ரசிகர்கள் அதிகம் விரும்பும் தம்பதிகளாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் . ரசிகர்களுக்கு எல்லையில்லா ஆனந்தம் தான்.
உதய்பூரில் கோலாகலத் திருமணம்
அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி நடிகை ராஷ்மிகா மந்தனா- நடிகர் விஜய் தேவரகொண்டா நட்சத்திர ஜோடிக்கு உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணப் பதிவுகள் வைரல்
திருமணத்தைத் தொடர்ந்து அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய திருமணப் புகைப்படங்கள் 3 மணி நேரத்தில் 29.9 மில்லியன் லைக்குகளைப் பெற்றது.
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ராஷ்மிகாவின் பதிவு
ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணப் புகைப்படங்கள் ஆசியாவிலேயே அதிகம் விரும்பப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவான விராட் கோலியின் 2024 டி20 உலகக் கோப்பைப் வெற்றிப் படத்தின் சாதனையையும் முறியடித்தது.
மேலும் உலக அளவில் அதிகம் விரும்பப்பட்ட இருபது பதிவுகளிலும் ராஷ்மிகாவின் திருமண பதிவு இடம்பெற்று உள்ளது.
வரவேற்பு நிகழ்வுகளில் கவனம்
திருமணத்தை அடுத்து வரவேற்பு நிகழ்வுகளில் இருவரும் கவனம் செலுத்த தொடங்கினாலும், ரசிகர்களையும் அவர்களுக்காக பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். மறக்கவில்லை.
ரசிகர்களுக்கு திருமண விருந்து
திருமண விருந்தாக இந்தியாவின் பல பகுதிகளிலும் பழச்சாறு கொடுப்பது, கோவில்களில் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் அன்னதானம் செய்வது என பல ஏற்பாடுகளை இருவரும் செய்திருந்தனர்.
இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தற்போது இருவரும் ஒரு சிறப்பான செயலை செய்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
சொந்த ஊரான தெலுங்கானாவில் அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 44 மாணவர்களுக்கு தனது ட்ரஸ்ட் மூலம் உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளனர்.
திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் எடுத்துள்ளனர்.
ரசிகர்கள் பாராட்டு
இவர்களின் இந்த செயலைப் பார்த்த ரசிகர்கள் இப்படிக்கூட திருமணத்தை கொண்டலாம் எனும் வகையில் ராஷ்மிகா மந்தனாவையும், விஜய் தேவரகொண்டாவையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.