கதாநாயகனாக வலம் வரும் சந்தானம்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் நகைச்சுவை பாத்திரங்களில் முத்திரை பதித்த இவர் கதாநாயகனாவும் வந்துக்கொண்டு இருக்கிறார்
கதாநாயகனாக சந்தானத்தின் திரைப்படங்கள்
நகைச்சுவை தொடர்ந்து , வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாகப் புதிய அவதாரம் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு', 'ஏ1', 'டிடி ரிட்டர்ன்ஸ்' என வரிசையாகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
புதிய திரைப்பட அறிவிப்பு
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் 'டெவிஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் வெளியானது.
இந்தநிலையில்,சந்தானம் நடிக்கும் அவரது அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் (AGS) எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 29-வது தயாரிப்பாக இந்தப் படம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
நீண்ட நாள் எதிர்பார்ப்பு
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அவரது 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிபிடத்தக்கது
புதிய படத்தின் அப்டேட்
சந்தானம் நடிகும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு 'லவ் பைட்' (Love Bite) எனப் படக்குழு பெயரிடப்பட்டுள்ளது. 'கான்ஜூரிங் கண்ணப்பா' என்ற திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஒருவேளை பேய் படமாக இருக்குமோ?
படத்தின் தலைப்பு மற்றும் அண்மையில் வெளியான அதன் போஸ்டர் (Poster) ஆகியவைகளை வைத்து இந்தப் படமும் ஒரு பேய் படமாக (Horror-Comedy) இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சந்தானத்திற்கு ஒரு மைக்கல்லாக இப்படம் இருக்குமா
ஏஜிஎஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனத்துடன் சந்தானம் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நகைச்சுவை கலந்த திகில் பாணியில் சந்தானம் ஏற்கெனவே பல வெற்றிகளைக் கொடுத்துள்ளதால், 'லவ் பைட்' திரைப்படமும் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் எனத் தெரிகிறது.
முக்கிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் திரைப்படக்குழு
விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்புகளைப் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
===========