

தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கிய ஜனநாயகன், பராசக்தி
parasakthi censor certificate டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளியாக இருந்து இந்த படத்தினை தொடர்ந்து, தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் படமும் திரைக்கு வரவிருந்தது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு, 9 ஆம் தேதி வெளியாகவிருந்த படம் தள்ளிப்போனது. இதனால், ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
சிக்கலில் இருந்து மீண்ட பராசக்தி
இந்த பொங்கல் கொண்டாடத்திற்கு பராசக்தி தான் என முடிவு செய்த திரை ரசிகர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,பராசக்தி படத்தின் தணிக்கை சான்றிதழுக்கும் முட்டுக்கட்டை விழுந்தது.
இதனால், சிவகார்த்திகேய்ன ரசிகர்களும் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என குழப்பத்தில் இருந்தனர்.
ஜனநாயகனுக்கு முன் ரிலீஸாகும் பராசக்தி
இந்நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் ஜனநாயகன், பராசக்தி என மாபெரும் நடிகர்களின் இருபடங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.ஆனால், 9 ஆம் தேதியன்று தீர்ப்பு வெளியாகியுள்ளதால், அதே தேதியன்று வெளியாகவிருந்த விஜயின் ஜனநாயகன் தள்ளிப்போனது உறுதியானது.
இந்நிலையில், அதே தேதியில் பராசக்திக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால், 10 ஆம் தேதி என குறிப்பிட்ட தேதியில் பராசக்தி வெளியாவது உறுதியாகியுள்ளது.
பராசக்தி படக்குழுவினர்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உறுதியாகுமா என்ற ரசிகர்களின் குழப்பத்திற்கு பதில் கிடைத்துள்ளது.
திட்டமிட்டபடி ரிலீசாகும் பராசக்தி
இந்நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி நானை திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகும், என்பதால் திரை ரசிகர்கள் முதல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வரை குஷியில் உள்ளனர்.