

CBFC Censor Board New Rules in Tamil : மார்ச் 15 முதல் புதிய திரைப்படங்களுக்கு சப் டைட்டில் மற்றும் காட்சிகளை விளக்கும் ஒலி வடிவம் கட்டாயம் என தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மத்திய அரசானது, திரைப்படங்களுக்கான விதிகளில் பல விதிகளை அறிவித்திருந்தது.
சப் டைட்டில் கட்டாயம்
அதன்படி திரைப்படத்தைப் பார்க்கும் போது காது கேளாதவர்களுக்கும் வசனம் புரியும் வகையில் திரையில் சப் டைட்டில் இடம் பெற வேண்டும்.
ஒலிவடிவ காட்சியும் கட்டாயம்
பார்வை திறன் இல்லாதவர்களும் காட்சிகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி வடிவில் காட்சிகளை விவரிக்கும் முறையில் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என்றும் தணிக்கை வாரியத்திற்கு அறிவித்திருந்தது.
மார்ச் 15 முதல் அமல்
அதன்படி தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தணிக்கை வாரியம் இந்த அறிவிப்புகளை நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் தணிக்கை வாரியத்தில் சமர்ப்பிக்கப்படும் புதிய படங்கள் இதன் அடிப்படையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
காது கேளாதோர், பார்வையற்றோர் உள்ளிட்ட அனைவரும் படங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இரண்டு அம்சங்களுடன் சமர்ப்பிக்கப்படும் புதிய படங்களுக்கே இனி தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் எனறும் தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மாறுபட்ட கருத்து
தணிக்கை வாரியத்தின் இந்த அதிரசி அறிவிப்பு வெளியான நிலையில், சினிமா ரசிகர்கள் சிலர், இப்படி படங்களின் இடையே சப் டைட்டில் மற்றும் ஒலி வடிவம் சேர்க்கப்பட்டால் இடைஞ்சலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் தேவையானவர்களுக்கு மட்டும் இந்த வசதியுடன் படத்தை பார்க்கும் அனுபவத்தை வழக்கலாம் என்றும் இன்னும் சிலர் தணிக்கை வாரியத்தின் இந்த அறிவிப்பு நல்ல முடிவு , வரவேற்கிறோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.