
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 45 வது படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் தலைப்பை போஸ்டராக வெளிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘கருப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம் ‘கருப்பு’. இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாஸிகா, அனகா மாயா ரவி, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க கலைஞர்களின் பட்டாளம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை கையாள்கிறார். கலைவாணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். விக்ரம் மோர் மற்றும் அன்பறிவு இரட்டையர்கள் என மூவரும் 'கருப்பு' திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை அதிரடியாக வடிவமைத்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் ஏற்கனவெ தெரிவித்தபடி, ‘கருப்பு’ ஒரு பண்டிகை நாள் கொண்டாட்டத்துக்கான திரைப்படமாக கச்சிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.