

The movie *Jana Nayakan*, starring Vijay, is set to release on the ZEE5 OTT platform on August 21.
ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
முதல்வர் விஜய் நடிப்பில் உருவான கடைசி திரைப்படம் 'ஜன நாயகன்' . இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்க வெளியீடு
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை சான்று பிரச்சனைகள், நீதிமன்ற வழக்குகள், முழு படமும் இணைய தளத்தில் கசிந்தது என ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தது.
இந்த அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து இறுதியாக, முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 23 தேதி அன்று உலகெங்கும் கிட்டத்தட்ட 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி பிளாக் ஃபஸ்டர் ஹிட்டானது.
இதையும் படிங்க : அஜித் குமாரின் 'டேர் டெவில்' படத்தில் மோகன்லால், வெங்கடேஷ்? தீயாகப் பரவும் புதிய தகவல்!
பாக்ஸ் ஆபீஸ் வசூல்
இப்பத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டதால் குழந்தைகள் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும், உலகளவில் ரூ. 280 கோடிக்கும் அதிகமாகவும், தமிழகத்தில் ரூ. 120 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி5 தளத்தில் ஒளிபரப்பு
திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து, 'ஜன நாயகன்' திரைப்படம் ஜி5 (ZEE5) ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், தற்போது ஓடிடியிலும் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வருகையில்லா ஆவணப்பதிவு, நடைமுறையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் : நேரில் வரத் தேவையில்லை..!
======