Top 20 Film List: 2025-ல் டாப் வசூல் செய்த 20 படங்கள்: லிஸ்ட் இதோ!

2025 Highest Grossing Indian Films Top 2025 List : 2025 ஆம் ஆண்டிற்குரிய இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்து 20 படங்களின் பெயர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
Top 20 highest grossing films of 2025 in india - Here is Full list!
Top 20 highest grossing films of 2025 in india - Here is Full list!Google
2 min read

உலக சினிமா :

2025 Highest Grossing Indian Films Top 2025 List : சினிமா என்றாலே ரசிகர்கள் அதிகம், அதாவது வாய்மொழி, உடல் மொழி என்பதை தாண்டி, திரையில் திரையிடப்பட்டு அதில் சில உருவங்கள் நடித்து அதன்மூலம் மக்களுடன் சில உணர்ச்சிகளை கடத்தும் அந்த செயல்பாடே மனிதனுக்கு நெருக்கமான ஒரு நிகழ்வு தான்.

அதனால், தன்னை மறந்து, அதில் மூழ்கி இருப்பவர்களை தான் சினிமா பிரியர்கள் என்கிறோம். அதிலும் சினிமா பிரியர்கள் இதில் பல வகைப்படுவர், உலகா சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அதை பற்றி கலந்து ஆலோசித்து, பாராட்டி, விமர்சித்து என தனி சாம்ராஜ்ஜியாமே திரையிடலுக்கு பிறகு அரங்கேற்றப்படும்.

இந்திய சினிமா

அப்படி அவரவர்கள் தங்களின் மொழிக்கு ஏற்ப சில படங்களை பார்த்து குதூகளித்து, பிற மொழி வெற்றி படங்களையும் கண்டுகளித்து நகைப்பதுண்டு. இந்நிலையில், இந்திய சினிமா 2025 கிட்டதட்ட 2025ஆம் ஆண்டின் இறுதியை நாம் நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒரு படம் இந்திய அளவில் உச்சத்தைதொடும், அதில் ரசிகர்களை ஈட்டுவதில் இருந்து பொருளாதார அடிப்பனை என அவரவர் மனங்களுக்கு ஏற்ப படங்கள் கொண்டாடப்படும்.

ஆனால், சினிமாத் துறையை பொறுத்தவரை படத்தை இயக்கியவரில் இருந்து தயாரித்தவர் வரையில் இருந்து வெற்றி படம் என்றால் அது வணிக ரீதியாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்கள் குறித்து சில பட்டியல்களை பார்ப்போம்.

இதற்குமுன் 2024 ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய படங்கள் குறித்த லிஸ்ட் வெளிவந்தது. இந்நிலையில், இதுவரை வந்த படங்களில் எந்த படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது, 2024 ஆம் ஆண்டு வசூலை முந்துகிறதா என்று கணிக்கும்படி தற்போது 2025ஆம் ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 20 இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டாப் 20 லிஸ்டில் எத்தனை தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன என்ற பட்டியலில்

1. காந்தாரா சாப்டர் 1 - ரூ. 885+ கோடி

2. சாவா - ரூ. 807+ கோடி

3. சையாரா - 575 கோடி

4. கூலி - ரூ. 520 கோடி

5. வார் 2 - ரூ. 360 கோடி

6. மகா அவதார் நரசிம்ஹா - ரூ. 340+ கோடி

7. லோகா - ரூ. 301+ கோடி

8. They call him OG - ரூ. 300 கோடி

9. ஹவுஸ்ஃபுல் - ரூ. 290 கோடி

10. குட் பேட் அக்லி - 270+ கோடி

11. சித்தாரே சமீன் பர் - ரூ. 270 கோடி

12 எல் 2: எம்புரான் - ரூ. 265+ கோடி

13. சங்கராந்திக்கு வஸ்துனம் - ரூ. 255 கோடி

14. ரெயிடு 2 - ரூ. 237+ கோடி

15. துடரும் - ரூ. 232+ கோடி

16. தாமா - ரூ. 191+ கோடி

17. கேம் சேஞ்சர் - ரூ. 186 கோடி

18. சிக்கந்தர் - ரூ. 186+ கோடி

19. ஜாலி எல்எல்பி 3 - ரூ. 171 கோடி

20. டிராகன் - ரூ. 151+ கோடி

தமிழ்திரைப்படங்கள் எத்தனை கோடி

2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 20 திரைப்படங்களின் லிஸ்டில் கூலி, குட் பேட் அக்லி மற்றும் டிராகன் ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள என்பது முக்கியமான ஒன்றாகும். அடுத்த ஆண்டில் தமிழ் படங்கள், இந்திய வணிக வசூல் லிஸ்டில் முதலிடத்தை பிடிக்குமா என்று பார்ப்போம்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in