டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து காதலிலும் வெற்றி!

Tourist Family Director Abishan Jeevinth Akhila Ilangovan Marriage Photo : அபிஷன் ஜீவின்ந்த்- அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tourist Family Director Abishan Jeevinth Akhila Ilangovan Marriage Photo Viral On Social Media
Tourist Family Director Abishan Jeevinth Akhila Ilangovan Marriage Photo Viral On Social MediaTourist Family Director Abishan Jeevinth Akhila Ilangovan Marriage Photo X Page
1 min read

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்கம்

Tourist Family Director Abishan Jeevinth Akhila Ilangovan Marriage Photo : சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்த நிலையில், இப்படத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை மிகவும் துள்ளியமாகவும், நகைச்சுவை கலந்து அவர் எடுத்த விதம் அனைவராலும் பாராட்டுக்குரியது.

அபிஷன் ஜீவின்ந்த் வளர்ச்சி

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து, அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

அபிஷன் ஜீவின்ந்த் காதல்

இந்த நிலையில், தனது முதல் படமான டூரிஸ்ட் ஃபேமிலி(Tourist Family) வெளியீட்டு விழாவின் போது தனது நண்பரும் நீண்ட நாள் காதலியுமான அகிலாவை நிகழ்ச்சி மேடையின் மீதே இயக்குநர் அபிஷன் ஜீவன்ந்த் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். இவரின் இந்த கேள்வி குறித்த காணொளி அவ்வப்போது பெரும் பேசுபொருளாகவும், வைரலாகியது.

மேலும் படிக்க : வெளியானது முத்துராமலிங்க தேவரின், தேசத்தலைவர் படம் - விவரம் இதோ!

காதலியை கரம் பிடித்த இயக்குநர்

இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவின்ந்த் இன்று கரம் பிடித்தார்(Abishan Jeevinth Akhila Ilangovan Marriage). சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

புதுமண தம்பதிகளான அபிஷன் ஜீவின்ந்த்- அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in