
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான திரிஷா செல்லப் பிராணிகள் மீது அதீத பாசம் கொண்டவர். விலங்கு வதை தடுப்புப் பிரிவான பீட்டா அமைப்பிலும் திரிஷா உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் நடிகை திரிஷா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளார்.
வரும் ஜூலை 2ஆம் தேதி இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார்.
3 மீட்டர் உயரம் கொண்ட இந்த யானையின் எடை 800 கிலோ. கஜா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர யானையின் விலை கிட்டத்தட்ட 8 இலட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோவில்களுக்கு யானை வழங்கியது போல் நடிகை திரிஷாவும் தற்போது செல்வ விநாயகர் கோவிலுக்கு யானையை வழங்கியிருப்பதாக பேசப்படுகிறது.
மற்றொரு பக்கம் விஜய்யின் கட்சிக்காகவும், அவரது பிறந்த நாளை முன்னிட்டுத்தான் நடிகை திரிஷா இந்த இயந்திர யானையை கோவிக்கு பரிசாக கொடுத்திருப்பாரோ என்றும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.