

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
CBI Notice To TVK Vijay on Karur Stampede Case : கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக 3 ஆவது நாளாக நடைபெற்ற விசாரணையில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அவர்களிடம் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி நிர்மல்குமார், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்ததாக கூறினார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதனை மறுத்த நிர்மல் குமார், விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக கூறினார்.
12ல் ஆஜர் - விஜய்க்கு சம்மன்
இந்நிலையில் தான் தற்போது விஜய்க்கு கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கோரி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ஜனநாயகனை தொடர்ந்து ஆஜராகும் விஜய்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் வரும் 9ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் 12ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
தவெகவுக்கு நெருக்கடி
இத்தனை நாட்கள் கழித்து ஜனநாயகன் ரிலீஸை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்க்கு இத்தகைய நெருக்கடி வந்துள்ளது என தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.