விரைவில் வட சென்னை 2 : நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்!

VADA CHENNAI 2 UPDATE: மேடைகளில் வடசென்னை 2 பற்றிய கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம் தனுஷ் வலியுறுத்தல்.
vada chennai 2 update: dhanush official announcement
vada chennai 2 update: dhanush official announcementsource:google
1 min read

VADA CHENNAI 2 UPDATE: வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வட சென்னை முதல் பாகம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்த திரைப்படம் வட சென்னை.

2018 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், வட சென்னையின் 35 ஆண்டு கால வாழ்வியலை பேசும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது.

தயாரிப்பு நிறுவனங்கள்

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

தனுஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த படத்தில் தனுஷ் அன்பு எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

ராஜ - சந்திரா

வடசென்னை என்றாலே நினைவிற்கு வரும் விதமாக இயக்குநர் அமீர் மற்றும் ஆண்டிரியாவின் கதாப்பாத்திரம் வடிவமைப்பட்டிருந்தது. அதனாலேயே ராஜன் - சந்திராவின் கதாப்பாத்திரம் ரசிகர்களின் மனதில் ஒன்றிப்போனது.

பார்ட் 2 எதிர்பார்ப்பு

அதனாலேயே ராஜனின் மரணத்திற்கு சந்திரா பழிவாங்குவாரா இல்லையா? தனுஷ் சந்திரா மோதல் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அதனாலேயே, வட சென்னை பார்ட் 2 எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

வட சென்னை 2 எப்போது ?

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் நட்சத்திர விழாவில் தனுஷ் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வடசென்னை 2 படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இனிமேலாவது, மேடைகளில் இதுபற்றிய கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம் என்றும் தனுஷ் கேட்டுக் கொண்டார்.

வேல்ஸ் நட்சத்திர விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் வடசென்னை பார்ட் 2 தங்களின் கனவு படம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in