
வேல்ஸ் நிறுவன எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் விவரம் வருமாறு :
இயக்குநர்கள் சுந்தர்.சி, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே.பாபு ஆகியோரது அடுத்த படங்களை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இயக்குநர்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் என்பதை மட்டும் அறிவித்துள்ள நிலையில், அதில் யார் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த திரைப்பட வரிசை எங்களின் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று வேல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.