கனத்த இதயத்துடன்....தாயார் மறைந்த 4 நாட்களில் பிரான்ஸ் கார் ரேசிங் பயிற்சிக்குத் திரும்பிய AK!

நடிகர் அஜித் குமார் தனது தாயாரின் மறைவுக்குப் பின், "வாழ்க்கை தொடர வேண்டும்" எனக் குறிப்பிட்டு பிரான்சில் நடக்கும் கார் ரேசிங் போட்டிக்கு தயாராகி வரும் நெகிழ்ச்சியான தகவல்.
With a Heavy Heart... AK Returns to Car Racing Training in France Just Four Days After His Mother's Passing!
With a Heavy Heart... AK Returns to Car Racing Training in France Just Four Days After His Mother's Passing!source: Ajithkumar Racing x.com
1 min read

கார் ரேசிற்கு தயாராகும் AK

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகரும் , ரேசருமான அஜித் குமார், பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் சர்வதேச கார் ரேசிங் போட்டியில் பங்கேற்பதற்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிரார்.

இது தொடர்பான புகைப்படங்கள் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

தாயார் மறைவால் ஏற்பட்ட பெருஞ்சோகம்

கார் பந்தயங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் குமார், அண்மையில் ஒரு பேரிழப்பைச் சந்தித்தார். கடந்த மே 30-ஆம் தேதி அவரது தாயார் இயற்கை எய்தினார். .

தனது தாயாரின் மறைவின் போது உருக்கமாகப் பேசியிருந்த அஜித், "அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாகத் திகழ்ந்தார்.

அவரது இருப்பும், அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும்தான் எங்கள் வாழ்வை வடிவமைத்தன; அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்" என தெரிவித்திருந்தார்.

"வாழ்க்கை நிச்சயமாக தொடர வேண்டும்" – அஜித்தின் எமோஷனல் பதிவு

தாயாரை இழந்த இப்பெருஞ் சோகத்திலும், அந்த இழப்புக்கு ஆளான நான்கே நாட்களில் அஜித் குமார் மீண்டும் தனது கார் ரேசிங் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள உலகளாவிய கார் பந்தயப் போட்டியில் அவரது பந்தயக் குழு பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கனத்த இதயத்துடன்....

இதுகுறித்து தனது கார் ரேசிங் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஜித் குமார், "கனத்த இதயத்துடன் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்" என்று உத்வேகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் 'ஏகே' (AK)

நடிகர் அஜித் குமார் தனது சினிமா படப்பிடிப்புகளின் போதோ அல்லது கார் பந்தயங்களின் போதோ பலமுறை கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இருப்பினும், எதற்கும் அஞ்சாமல் தொடர்ச்சியாக ரிஸ்க் எடுத்து, தனது விடாமுயற்சியைக் கைவிடாமல் முன்னேறி வருவது அவரது தனித்துவமாகும்.

AK- வின் தன்னம்பிக்கை

தனிப்பட்ட வாழ்வில் நேர்ந்த இத்தகைய பெரும் துயரத்திற்கு மத்தியிலும், அவர் காட்டியுள்ள இந்தத் தொழில்பக்தியும் மனவலிமையும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in