

ஜெயம் திரைப்படத்தில் அறிமுகம்
Ravi Mohan directorial debut : ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி தமித் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ரவி மோகன் பெயர் மாற்றம்
பல வெற்றித் திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வரும் ஜெயம் ரவி சமீபத்தில், தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும் இனிமேல் ரவி மோகன் என அழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்
தொடர்ந்து ரவி மோகன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி, மூன்று திரைப்படங்களைத் தான் தயாரிக்க உள்ளதாகவும் நடிகர் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து, படம் இயக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
பராசக்தி வில்லனாக ரவி மோகன்
இதற்கிடையில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பராசக்தி என்ற படத்தில் நடித்திருந்தார். வில்லன் கதாப்பாத்திரத்தில் ரவி மோகம் தனது நடிப்புத்திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரவிமோகன் குறித்து கெனிஷா
இந்த கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும் என்று ரவி மோகனின் தோழியும், பாடகியுமான கெனிஷா கூறியிருந்தார். அதன்படி அக்கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்களிடையே பெரும் பாராட்டும் கிடைத்தது.
கதாநாயகனாக யோகிபாபு
இந்நிலையில், தற்போது யோகிபாபுவை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ரவி மோகன் கதாநாயகனில் இருந்து இயக்குநராக களமிறங்குகிறார்.
பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
இந்த படத்திற்கான பூஜை நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
'An Ordinary Man'
இயக்குநர் ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படித்திற்கு 'An Ordinary Man' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.
Bro Code
ஏற்கெனவெ, ப்ரோ கோட் திரைப்படம் தயாரிப்பில் உள்ளது. இதுதான் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் படமாகும்.
அன் ஆர்டினரி மேன் குறித்து யோகிபாபு கூறுகையில்,
கோமாளி திரைப்ப்டத்தின் போதே தன்னை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியதாக குறிப்பிட்டார்.
அனைவரும் சொல்வார்கள், ஆனால் மறந்து விடுவார்கள். ரவி மோகன் 6 ஆண்டுகளுக்கு பிறகும் சொன்னதை மறக்காமல் நிறைவேற்றுகிறார் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆர்வம்
ரவி மோகனின் கதாநாயகன் பயணத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் திரைப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.