
Zootopia 2 Official Trailer Released : வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் சாகசப் படம் 'ஜூடோபியா. ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வழக்கை முறியடித்த பிறகு, புதுமுக போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர், சீஃப் போகோ (இட்ரிஸ் எல்பாவின் குரல்) நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் பார்ட்னர்ஷிப் அவர்கள் நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பதைக் கண்டறிந்தனர். விஷப் பாம்பின் வருகையுடன் இணைக்கப்பட்ட ஒரு மர்ம பாதையில் அவர்கள் தங்களைக் கண்டுபிடிக்கும்போது, அவர்களின் பார்ட்னர்ஷிப் சோதனைக்குட்படுத்தப்படுகிறது.
'ஜூடோபியா 2' கேரி டி'ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்), நிப்பிள்ஸ் (பார்ச்சூன் ஃபீம்ஸ்டரின் குரல்) மற்றும் குவாக்கா தெரபிஸ்ட் டாக்டர் ஃபஸ்பி (குயின்டா பிரன்சனின் குரல்) ஆகியோரை அறிமுகப்படுத்துகிறது. அதே சமயம், வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற முதல் பாகத்தில் அறிமுகமான பல கதாபாத்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின்(Walt Disney Animation Studios) தலைமை படைப்பாக்க அதிகாரியும், இந்தப் படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜேரெட் புஷ் கூறியதாவது, முதல் படத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றிய பல நடிகர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த முறை இன்னும் பல புதிய நடிகர்களுடன் சேர்ந்து எங்கள் அற்புதமான உலகை விரிவுபடுத்தி இருக்கிறோம். இந்த புத்தம் புதிய சாகச படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் ஒளிந்துள்ளது. இதனைப் பார்வையாளர்கள் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
மேலும் படிக்க : சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ எப்போது? : லோகேஷ் கனகராஜ் பதில்
ஆஸ்கர் விருது பெற்ற அணியினரான ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் (இயக்குநர்கள்) மற்றும் யெவெட் மெரினோ (தயாரிப்பாளர்) ஆகியோரின் 'ஜூடோபியா 2' திரைப்படம் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் 64வது அனிமேஷன்(64th Film Zootopia 2) திரைப்படமாகும்.
நவம்பர் 28 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் 'ஜூடோபியா 2' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.