கரூர் செல்வதற்கு விஜய்க்கு பாதுகாப்பு - தவெக வழக்கு

கரூரில் பலியான உயிர்கள் குறித்து தற்போது பெரும் சர்ச்சைகளும், கருத்துகளும் பரவி வரும் நிலையில், விஜய் கரூர் செல்வதற்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என தவெக கட்சியின் வழக்கறிஞர்அறிவழகன் தெரிவித்துள்ளார்.
The Tvk leader should be provided with adequate security to go to Karur - Arivazhagan!
The Tvk leader should be provided with adequate security to go to Karur - Arivazhagan!
1 min read

கரூர் துயரம்

The Tvk leader should be provided with adequate security to go to Karur - Arivazhagan! கரூர் பிரச்சாரத்தால் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது நிதிகளையும் இரங்கல்களையும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை கரூர் மக்களை தவெக தலைவர் விஜய் அவர்கள் நேரில் பார்க்காததால் மக்கள் பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தவெக உறுப்பினர்கள் கூட்டத்தில் சதி நடந்துள்ளது, கள் எரிந்தனர் உட்பட பல வித குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் குறித்து நாளை மதுரை அமர்வு நீதிமன்றனத்தில் விசாரிக்கப்படும் என்ற தெரிவித்த நிலையில்.

நீதிமன்ற சந்திப்பு

29 ஆம் தேதி அன்று தவெக நிர்வாகிகள், தவெக கட்சியின் வழக்கறிஞர் அறிவிழகன் உட்பட பலர் மதுரை நீதிமன்றத்திற்கு சென்று தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.

அறிவழகன் செய்தியாளர்கள் சந்திப்பு

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன் கரூர் நிகழ்ச்சியில் தடியடி நடத்தப்பட்டது என எங்கள் மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களை உடனடியாக உடற்கூராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?. ஏற்கெனவே மருத்துவமனையில் உயிரிழந்தவர்களையும் இந்த கணக்கில் காட்டியுள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவத்தில் மிகப்பெரிய சதிவலை உள்ளது, இது தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. செந்தில் பாலாஜி பற்றி விமர்சித்த பின்னர் விஜய் மீது அந்தக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதுகுறித்து எல்லாம் விசாரிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் எல்லாம் விஜய் பிரச்சாரம் செய்தபோது பிரச்சினை இல்லை, கரூரில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டது ஏன்?. இதில் அனைவரும் ஒருவரையே குற்றம் சாட்டுகின்றனர். என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதங்களில் ஆதரவு

மேலும், நாங்கள் காவல்துறை கொடுத்த நிபந்தனைகள் எதையும் மீறவில்லை. மக்களுக்கு குடிநீர், உணவு ஆகியவற்றை தவெக நிர்வாகிகள் கொடுத்தார்கள். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று கூறினார். இவரின் செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் தங்கள் கருத்துக்களையும், மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ்களை சமூக வலைதங்களில் பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in