

ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் :
Tamil Nadu Government On Old Pension Scheme : கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சி அமைந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளிட்ட மேலும் பல வாக்குறுதிகளை அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழித்து வரும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவோம் எனவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு அதற்கு தற்போது வரை பதில் அளிக்கமால் இருந்து வரும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட கோணங்களில் தங்களின் நிலையை வெளிப்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திமுக அரசின் மௌனம் :
இதனை தொடர்ந்து, மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக திமுக அரசு அறிவித்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம்(Old Pension Scheme), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் சிறந்ததை தேர்வு செய்து செயல்படுத்த போவதாக திமுக அரசு அறிவித்தது.
மேலும் படிக்க : 78 நாட்கள் தீபாவளி போனஸ் : ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு பரிசு
அரசு ஊழியர்கள் வருத்தம்
இதற்காக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களில் கருத்து கேட்கப்பட்டது. செப்டம்பர் 30ஆம் தேதி குழு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் தேர்வு செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஆனால், இது குறித்து தற்போது வரை திமுக அரசான, மாநில அரசு முடிவெடுக்காமல், அரசு ஊழியர்களை கவலைக்கிடமான நிலையில் தள்ளி, மௌனம் காத்து வருகிறது என அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.