
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி ஐடி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டார். மாற்று சமூகப் பெண்ணை காதலித்து வந்ததால் அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் பெற்றோர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் உதவி ஆய்வாளர்காளக பணியாற்றி வருகின்றனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில், தேசிய ஆதிதிராவிட ஆணையத் தலைவர் திரு. கிஷோர் மக்வானா தலைமையிலான உறுப்பினர்கள் ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவினின் பெற்றோரிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில்இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார், காவல்துறை உயர் அதிகாரி சாமூண்டிஸ்வரி, திருநெல்வேலி காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உட்பட அரசு அலுவர்கள் பலர் கலந்து கொண்டனர்.