வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக-விற்கு சாதகமாக இல்லை

சர்வதேச நிறுவனத்தை வைத்து திமுக நடத்திய ரகசிய சர்வேயில் வரும் 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக சூழ்நிலை இல்லை என்று தெரிவந்துள்ளதாக பத்திரிக்கையாளர் மணி கூறியுள்ளார்.
வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக-விற்கு சாதகமாக இல்லை
1 min read

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்து பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டணிக் கட்சிகளை தக்கவைப்பது, புதிய கூட்டணிகளை உருவாக்குவது, பூத் கமிட்டிகளின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது என்று அரசியல் கட்சிகளின் பணிகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன.

அந்த வகையில ஆளும் கட்சியாக உள்ள திமுகவும் தனது பணிக்கு அடுத்தடுத்து செய்யவேண்டிய வேலைகளை ஒரு பக்கம் முடிக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் மணி அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் குறித்து யூடூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் திமுக ஒரு சர்வதேச நிறுவனத்தின் மூலம் வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகள் குறித்து மக்களின் மனநிலையை தெரிந்துகொள்ளும் விதமாக ரகசிய சர்வே நடத்தியதாக கூறிப்பிட்டார்.

இந்த சர்வ முடிவுகள் திமுக-விற்கு சாதகமாக இல்லாத நிலை இருப்பதாகவும், அதனால் சற்று கலக்கம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வேயில் 3 வகையான முடிவுகள் வெளியாகி உள்ளதாகவும் மணி தெரிவித்துள்ளார்.

அதன்படி திமுக தனித்து பெரும்பான்னை பெறாமல் கூட்டணி மூலம் பெரும்பான்மை பெரும் என்றும், இரண்டாவதாக அதிமுக தனித்து பெரும்பான்னை பெறாமல் கூட்டணிக் கட்சியுடன் பெரும்பான்மை பெரும் என்று கூறியுள்ளார். அதேபோன்று மூன்றாவதாக இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்னை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று 3 விதமாக முடியும் கிடைத்துள்ளதாக மணி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் விஜயின் தவெக இணைந்துவிட்டார். இந்த கூட்டணி எளிதாக வென்றுவிடும் என்றும் அந்தப் பேட்டியில் பத்திரிக்கையாளர் மணி ரகசிய சர்வேவை குறிப்பிட்டு பேட்டி அளித்துள்ளார்.

எப்படிப் பார்த்தாலும் வரும் தேர்தலில் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை மணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in