11th Exam : 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! அரசாணை வெளியீடு!

11th Pubic Exam : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஆணையின்படி, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்பொழுது வெளிவந்துள்ள அரசாணையின்படி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
11th Pubic Exam Cancelled 2025 Tamil Nadu
11th Pubic Exam Cancelled 2025 Tamil Nadu
1 min read

பொதுத்தேர்வு ரத்து

11th Pubic Exam Cancelled 2025 Tamil Nadu : தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் (2025 - 26) 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னர் இருந்த நடைமுறை பின்பற்றபடும்

2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு 12ம் வகுப்புக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு ரத்து குறித்த தாக்கம்

தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வால், 10 மட்டும் 12 ஆம் வகுப்பு இல்லாமல், 11 ஆம் வகுப்பையும் சேர்த்து, 3 வருடங்களாக மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதால், தொடர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், அதனை ரத்து செய்யும்படி கல்வி ஆராய்ச்சியார்ளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரின் வேண்டுகோளுக்கு இணங்க 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யும்படி அறிவிக்கப்பட்டிருந்தது, பின்னர், ரத்து குறித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால், 2017-2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படி தொடர உள்ள நிலையில், இதுவே சரியான முறையாக இருக்கும் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in