

IBM Hiring in Chennai : பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம்-யில் அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்பட 21 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ட்ரி லெவல் டெஸ்ட்
ஐபிஎம் (IBM) ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
படிப்பு தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனை சார்ந்த துணை படிப்புகள் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஏஐஎம்எல், டிஎஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், சிஎஸ்பிஎஸ், ஐஓடி, ரோபோடிக்ஸ், ஏஐ, சைபர் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்
புரோகிராமிங் தெரிய வேண்டும்
விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது என்று ஐபிஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6 சிஜிபிஏ/60% வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், விண்ணப்பம் செய்வோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜ்களான Java, C++, python, Node.Js உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலம் சரளமாக தெரிய வேண்டும்
சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், interpersonal Skills இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பணி இடை நீக்கம் செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு இடையில், ஜோஹோவை தொடர்ந்து ஐபிஎம் நிறுவனமும் வேலைவாய்ப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.