ரயில்வேயில் 5,810 காலிப்பணியிடம்- டிகிரி இருந்தால் போதும்!

RRB NTPC Recruitment 2025 : இந்தியன் ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,810 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்திருந்தாலே போதும் என்றும் தெரிவித்துள்ளனர்.
RRB NTPC Recruitment 2025 Notification 5,810 Job Vacancy Apply For Station Master Various Position Check Full Details in Tamil
RRB NTPC Recruitment 2025 Notification 5,810 Job Vacancy Apply For Station Master Various Position Check Full Details in Tamilgoogle
2 min read

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

RRB NTPC Recruitment 2025 : இந்தியன் ரயில்வே பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்தியன் ரயில்வே துறையில் வேலைவாயப்புக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். ரயில்வே தேர்வில் தேர்ச்சி பெற, பலரும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கைநிறைய சம்பளம், நிரந்தர வேலை, பென்சன் போன்றவை இருப்பதால், இளைஞர்கள் ரயில்வேயில் வேலை பார்க்க ஆர்வமுடன் உள்ளனர். எனவே, ரயில்வேயில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

மொத்தம் 5,810 காலி பணியிடங்கள்

அதாவது, இந்தியன் ரயில்வேயில் Non-Technical பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 5,810 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் மேற்பார்வையாளர் பணிக்கு 161 இடங்களும், ரயில் நிலைய மாஸ்டர் பணிக்கு 615 பணிகளும், சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு 3,416 பணியிடங்களும், ஜூனியர் கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கு 921 இடங்களும், மூத்த எழுத்தர், தட்டச்சர் பணிக்கு 638 பணிகளும், போக்குவரத்து உதவியாளர் பணிக்கு 59 இடங்களும் என மொத்தம் 5,810 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தட்டச்சு இருந்தால் சுலபம்

கல்வித்தகுதி மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதிய பொறுத்தவரை, அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். அதாவது, டிக்கெட் மேற்பார்வையாளர், ரயில் நிலைய மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், போக்குவரத்து உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். தட்டச்சர், முதுநிலை எழுத்தர் பணிக்கு டிகிரி முடித்திருப்பதோடு, கணினி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தட்டச்சுத் திறன் பெற்றிருப்பது கட்டாயமாகும். இதற்கு தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பில் தளர்வு

வயது விவரம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 33 வயது வரை விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதாவது, பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கு 5 ஆண்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களுக்கு 10 ஆண்களும் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

மாத சம்பளம் எவ்வளவு

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.35,400, டிக்கெட்(RRB Railway Station Master Salary) மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.35,400, சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு ரூ.29,200, இளநிலை கணக்கு உதவியாளர் பணிக்கு ரூ.29,200, முதுநிலை எழுத்தர் பணிக்கு ரூ.29,200, போக்குவரத்து உதவியாளர் ரூ.25,500 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகள் எப்படி

மேற்கண்ட பணிகளுக்கு இரண்டு முறை கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, பணிக்கு அமர்த்தப்படுவார்கள். முதல் கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) 90 நிமிடங்கள் நடைபெறும். இந்த வினாத்தாளில் பொது விழிப்புணர்வு, கணிதம் மற்றும் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு என மூன்று பிரிவுகளில் தேர்வு நடைபெறும். பொது விழிப்புணர்வு வினாத்தாளில் 40 கேள்விகள் கேட்கப்படும். கணிதத்தில் 30 கேள்விகள், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு என தலா 30 கேள்விகள் இருக்கும். முதல் கட்ட CBT தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் இருக்கும். இரண்டாம் கட்ட CBT தேர்வில் பொது விழிப்புணர்வு வினாக்கள் 50, கணிதத்தில் 35 கேள்விகள் மற்றும் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவில் 35 கேள்விகள் இருக்கும். இரண்டாம் கட்ட CBT தேர்வில் மொத்த கேள்விகள் 120 ஆகும். இந்த தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் திருப்பி அளிக்கப்படும்

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் rrbapply.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. அதாவது, நவம்பர் 27ஆம் தேதி மேற்கண்ட பணிகளுககு விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வுக்கு பின்பு, ரூ.400 திருப்பி அளிக்கப்படும். அதே நேரத்தில், பட்டியலின, பழங்குடி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வுக்கு பின்னர் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பணிக்கு தகுதியானோர் விரைவில் முந்தி முயற்சி செய்து பாருங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in