ZOHO Recruit : வேலைவாய்ப்பை வாரி வழங்கும் ஜோஹோ- மிஸ் பண்ணீடாதீங்க!

ZOHO Recruit 2025 : வேலையை பறித்து, இடைநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு இடையில் ஜோஹோ நிறுவனம் தொடர்ந்து வேலைவாய்ப்பை வாரி வழங்கி வருகிறது.
ZOHO Recruit 2025 Job Opening for Sales Development Representatives in ZOHO Corporation
ZOHO Recruit 2025 Job Opening for Sales Development Representatives in ZOHO CorporationZOHO Recruit
1 min read

ஜோஹோ நிறுவனம்

ZOHO Recruit 2025 : தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது உலகளவில் பிரபலமாக இருகும் சோஷியல் மீடியாக்களை உடைத்து தனது ஆஃப்களை வெளியிட்டது. இந்தியாவின் மத்திய அமைச்சரகமே முழுவதும் ஜோஹோவிற்கு மாரியுள்ள நிலையில், தற்போது அரட்டை, உலா என தனது மார்க்கெட்டில் தனது பெயரை முன்னிறுத்தி சாதனை படைத்து வருகிறது.

ஜோஹோ வேலைவாய்ப்பு

இந்நிலையில், ஜோஹோ தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது, அதன்படி, Sales Development Representatives பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அறிவித்துள்ளது.

பணி தகுதி

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சேல்ஸ் டீமில் பணியாற்ற தேவையான குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும்.

அதேபோல் இன்கம்மிங் சேல்ஸ் கால்ஸ், இ-மெயில் உள்ளிட்டவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், புராடக்ட் பிரசென்டேஷன் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தகுதியை பொறுத்து சம்பளம்

மேலும் கஸ்டமர்களை அனுசரித்து பேசவும், தனிப்பட்ட முறையில் திறமையாக பணி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், நைட்ஷிப்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். அவர்களின் நிர்ணியித்துள்ள தகுதிக்கு ஏற்றார்போல் இருந்தால், விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

3 இடங்களில் பணியமர்த்தப்படுவர்

இ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக விண்ணப்பத்தாரர்களை ஜோஹோ நிறுவனம் தொடர்பு கொள்ளும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை மற்றும் டெல்லியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in