WWE-வில் இருந்து ஜான் சீனா ஓய்வு : வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!

John Cena Retirement : WWE மல்யுத்த போட்டிகளில், 17 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் சீனா, கடைசி போட்டியில் தோல்வியுடன் WWEக்கு விடை கொடுத்தார்.
American actor and retired professional Wrestler WWF Champion John Cena Announcement His Retirement Latest News in Tamil
American actor and retired professional Wrestler WWF Champion John Cena Announcement His Retirement Latest News in Tamilgoogle
2 min read

WWE-ன் மாபெரும் ரசிகர் பட்டாளம்

John Cena Retirement : கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்தியாவில் தனி மவுசு இருக்கிறது என்றால் அது மிகையாகது. அதைப்போல கால்பந்து, ஹாக்கி என ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனி ரசிகர் பட்டாளமே அலைகடல் போல் குவிந்து கிடக்கின்றனர். ஆனால், சுவாரசியத்தை ஒவ்வொரு விளைாயட்டிலும், மேட்ச்சிலும் கொண்டு சென்று விடும் என்பது உறுதி என்ற கூறும் வகையில் ஒரு கூண்டு அதாவது கயிறால் சுற்றி கட்டப்பட்டு இருக்கும் மேடை அதில் நடக்கும் அடிதடி அதற்கு தான் WWE என்று ஒரு பெயர். அதற்கு தான் உலகளவில், மூலை முடுக்கில் இருந்தும் ரசிகர் பட்டாளம்.

ஜான் சீனா எனும் WWE ஜாம்பவான்

அப்படி, கூறப்படும் WWE எனும் மல்யுத்த போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு.அப்படித்தானே, இந்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜான் சீனா. கடந்த 2002ம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என்று பெருமை அவருக்கு உண்டு, குறிப்பாக தனது சில பல வசனங்கள், செய்கை, பாவணைகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ராஜ்ஜியம், நெவர் கியவ்வப் என்ற வாக்கியத்துடன் WWE-ஐயே சுற்றி வந்தவர் ஜான் சீனா.

கவலையில் ஜான்சீனா ரசிகர்கள்

WWE-யில் தொடர்ந்து விளையாடுபவர்கள் ஒரு காலகட்டத்திற்கு மேல் தனது சொந்த காரணங்கள் அல்லது உடல்நிலை என ஓய்வை அறிவிப்பர். அப்படி காலங்கள் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த WWEயில் பலர் வெளியேறினாலும். தற்போது ரசிகர்களின் காதலனாக உலகமுழுவதும் உள்ள நாடுகளிலும் ரசிகர்களை வைத்திருக்கும் WWE ஜாம்பவான் ஜான்சீனாவின் அறிக்கை அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

ரசிகர்களின் கரகோஷத்துடன் ஓய்வு பெற்ற ஜான்சீனா

அதாவது வழக்கம் போல் WWEசண்டை முடிந்த பின்பு தனது இறுதிப்போட்டியை அறிவித்தார். அமெரிக்காவில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் நடக்கும் போட்டியே தன் கடைசி போட்டி என்றும், அதன் பிறகு ஓய்வு பெறப் போவதாகவும் மனம் திறந்தார்.இந்த செய்தி WWE வட்டாரங்கள் முதல் WWE ரசிகர்கள் வரை நிலைகுலைய செய்தது.

இந்நிலையில், அந்த போட்டியில் 'டேப் அவுட்' முறையில் ஜான் சீனா தோல்வியை தழுவினார். பின்னர், போட்டி முடிந்ததும், அவர் ரசிகர்களுக்கும், தன்னுடன் மோதிய வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஜான் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜான்சீனா குறித்து சிறிய பார்வை

1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தவர் ஜான் சீனா. WWE மல்யுத்த வீரரான இவர், படங்கள், தொடர் நாடகங்கள், வீடியோ கேம்ஸ், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். WWE- ஐ தாண்டி இவரின் நடிப்புக்கும் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், இவர் கலிபோர்னியாவில் உள்ள பல்கலையில் பயிற்சி பெற்றார். 2001ம் ஆண்டு உலக மல்யுத்த கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொடர் ஆட்டங்களில் விளையாடி வந்து, தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கினார். தற்போது இவரின் இந்த ஓய்வு முடிவுக்கு பலரும் வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தாலும், WWE இனி இவர் இல்லை என்று சமூக வலைதள்ங்களில் வேதனையையும் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in