

100 வது விக்கெட்டைய வீழ்த்திய ஸ்டார்க்
AUS vs ENG 1st Test Match Highlights Ashes 2025 : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தொடர் 2025-26, இன்று தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி, பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணி பேட்டிங்
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. போட்டியின் தொடக்கத்திலேயே, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது ஆஷஸ் வாழ்க்கையின் 100வது விக்கெட்டை வீழ்த்தி வரலாறு படைத்தார்.
பந்து வீச்சில் துவம்சம் செய்த ஸ்டார்க்
புதிய சாதனையாக ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். அவர் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவர்கள் முறையே 0 மற்றும் 21 ரன்கள் எடுத்தனர். மேலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டையும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்கு அனுப்பினார்.
100 விக்கெட் சாதனையை பதிவு செய்த ஸ்டார்க்
இதைத்தொடர்ந்து இவரது பந்து வீச்சுக்கு தாக்கபிடிக்க முடியாத இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டை ஆஷஸ் தொடர் வரலாற்றில் 9வது முறையாக அவர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதன் மூலம், மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் தனது 100 விக்கெட் சாதனையை நிறைவு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி அடுத்து ஆட்டத்தில் நிரூபிக்குமா
23 டெஸ்ட் போட்டிகளின் 43 இன்னிங்ஸ்களில் 37 சராசரியுடன் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையும் அடங்கும்.
172 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து, ஸ்டார்க்கின் பந்துவீச்சுக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஸ்டார்க் தனி நபராக 7 விக்கெட்டுகளையும், பிரண்டன் டெக்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
===.