

சதம் அடித்த ஜோ ரூட்
Australia vs England in Second Ashes Test Highlights in Tamil : ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதிக்கொண்ட இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 334 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் சதத்தை அடித்து 138* ரன்கள் குவித்து அசத்தினார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய ஜாக் கிராவ்லி 76, ஜோப்ரா ஆர்ச்சர் 38, ஹாரி ப்ரூக் ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை கடக்கவில்லை.
ஆஸ்திரேலியா பந்துவீச்சு
இங்கிலாந்துக்கு எதிரான பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டிராவிஸ் ஹெட் 33 ரன்களை குவித்து அவுட்டானார்.
அவருடன் இணைந்து கொஞ்சம் அதிரடியாக விளையாடிய இளம் துவக்க வீரர் ஜாக் வெதர்லாண்ட் 72 (78) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – மார்னஸ் லபுஸ்ஷேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை அடித்தனர்.
அந்த ஜோடியில் லபுஸ்சேன் 65 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 7 பௌண்டரியை பறக்க விட்டு 45 ரன்கள் குவித்த போது அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
ஆஸ்திரேலியா 378 ரன்கள்
அவரை ஆட்டமிழக்க செய்த பிரைடன் கார்ஸ் மறுபுறம் நன்கு செட்டிலாகி விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும் 61 ரன்களில் அவுட்டாக்கினார்.
அடுத்ததாக வந்த அலெக்ஸ் கேரியுடன் சேர்ந்து அதிரடி காட்ட முயற்சித்த ஜோஸ் இங்லீஷ் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் நிறைவுக்கு வந்த 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 378/6 ரன்களை குவித்துள்ளது.
உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா
இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு களத்தில் கேரி 46*, மைக்கேல் நிஷர் 15* ரன்களுடன் உள்ளனர்.
இப்போட்டியிலும் இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸிலேயே திருப்பி அடிக்கும் ஆஸ்திரேலியா இப்போட்டியின் 2வது நாளில் மட்டும் 378 ரன்கள் குவித்தது.
இதன் வாயிலாக ஒரு பகலிரவு போட்டியில் ஒரு நாளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
இதற்கு முன் 2017ஆம் ஆண்டு பர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு அணிக்கு எதிரான பகலிரவு போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து 348 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
================