

செஸ் விளையாட்டு
D Gukesh Defeats Hikaru Nakamura At Clutch Chess in America : விளையாட்டு என்றால் பிடிக்காதோர் யாரும் இல்லை. அதிலும், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து என வெளி விளையாட்டை போல், உள் விளையாட்டான கேரம், செஸ் விளையாட்டையும் பிடித்து விளையாடாாதோர் கிடையாது. அதன்படி செஸ் விளையாட்டில் பரீட்சையாமாக நாம் அறிந்த உலக செஸ் சாம்பியன்,விஸ்வநாத் ஆனந்த்,மேக்னஸ் கார்ட்சன், உள்ளிட்டோரின் வரிசையில் சிறு வயதே ஆன தமிழகத்தை சேர்ந்த குகேஷ் இடம்பிடித்துள்ளார். உலக செஸ் சாம்பியனாக அறியப்படும் இவர், தொடர்ந்து வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
கிளட்ச் செஸ் போட்டி :
அதில் ஒரு போட்டியாக கிளட்ச் செஸ்(Clutch Chess Tournament 2025) சாம்பியன்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் மிசோரி நகரில் துவங்கின. நேற்று நடந்த முதல் போட்டியில், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் தோல்வி அடைந்தார். 2வது போட்டி டிரா ஆனது. அதன் பின், அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுடன் ஆடிய குகேஷ், முதல் போட்டியில் வெற்றி பெற்றார். பின், 2வது போட்டியில் டிரா செய்தார். பின்னர், அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவுடன் 2 போட்டிகளில் மோதிய குகேஷ், இரண்டிலும் வென்றார்.
மேலும் படிக்க : கிராண்ட் செஸ் தொடர் : பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
முதலிடம் பிடித்த குகேஷ்
நேற்றைய முடிவில், 4 புள்ளிகளுடன் குகேஷ் முதலிடம் பிடித்தார். குகேஷிடம் நேற்றைய போட்டியில் தோற்ற நகமுரா, சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் குகேஷை தோற்கடித்த பின், ஆரவாரம் செய்து அவரது ராஜாவை தூக்கியெறிந்தது, உலகளவில் பேசு பொருளாகி, பெரியளவில் விமர்சனத்திற்குள்ளானது. அதற்கு மாறாக, நகமுராவை நேற்று வென்ற குகேஷ், வெற்றி பெற்றோம் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல், நகமுரா கைகொடுத்ததிற்கு பதில் அளித்து மீண்டும் கைகொடுத்து நன்றி கூறி, செஸ் போர்டில் உள்ள காய்களை மீண்டும் அடுக்கி வைத்து விட்டு நெஞ்சில் கைவைத்து செஸ் போர்டிற்கு நன்றி கூறி அங்கிருந்து அமைதியாக நகர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.