சென்னையில் லீக் ஆட்டம் -300-லிருந்து டிக்கெட் விலை ஆரம்பம்!

ICC Men's T20 World Cup 2026 Match Schedule : சென்​னையில் பிப்​ர​வரி 26-ல் நடை​பெறும் சூப்​பர் 8 ஆட்​டத்​துக்​கான டிக்கெட் விலை ரூ.2 ஆயிரம் முதல் தொடங்​கும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICC Men's T20 World Cup 2026 Match Schedule At Chennai Stadium Ticket Price From Rs 2,000 Announcement From ICC
ICC Men's T20 World Cup 2026 Match Schedule At Chennai Stadium Ticket Price From Rs 2,000 Announcement From ICCICC
1 min read

முதல் ஆட்டத்தில் இந்தியா அமெரிக்கா மோதல்

ICC Men's T20 World Cup 2026 Match Schedule in Tamil : ஆட​வருக்​கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி 7 முதல் மார்ச் 8 வரை இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் 55 ஆட்​டங்​கள் நடை​பெற உள்ளன. போட்​டிகள் இந்​தி​யா​வில் அகம​தா​பாத், சென்​னை, டெல்​லி, மும்பை, கொல்​கத்தா ஆகிய நகரங்​களில் உள்ள மைதானங்​களி​லும் இலங்​கை​யில் கொழும்பு நகரில் உள்ள இரு மைதானங்​களி​லும், கண்​டி​யில் உள்ள மைதானத்​தி​லும் நடை​பெற உள்​ளன. நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் அமெரிக்காவுடன் மோத உள்​ளது.

300 ரூபாயில் இருந்து டிக்கெட் விற்பனை தொடக்கம்

இந்​நிலை​யில், இந்த தொடருக்​கான முதற்​கட்ட டிக்​கெட் விற்​பனை இணை​யதளம் வாயி​லாக நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்​தி​யாவில் உள்ள சில நகரங்​களில் நடை​பெறும் லீக் ஆட்டங்​களின் டிக்​கெட் விலை குறைந்தபட்​சம் ரூ.100 ஆக நிர்ண​யிக்​கப்​பட்டு இருந்​தது. அதேவேளை​யில் இலங்​கை​யில் நடை​பெறும் ஆட்டங்களுக்​கான டிக்​கெட் விலை இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.292 ஆக இருந்​தது.

8 ஆட்டத்துக்கான விலை 2 ஆயிரம்

சென்​னை​யில் நியூஸிலாந்து - ஐக்கிய அரபு அமீரகம் பிப்​ர​வரி 10-ம் தேதி மோதுகின்​றன. இந்த ஆட்​டத்​துக்​கான குறைந்​த​பட்ச டிக்கெட் விலை ரூ.300 ஆகவும், அதி​கபட்ச விலை ரூ.1000 எனவும் நிர்​ண​யிக்​கப்​பட்டு இருந்​தது. சென்​னை​யில் 6 லீக் ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. இவை அனைத்​துக்​கும் குறைந்​த​பட்ச விலை ரூ.300 என தெரிவிக்கப்​பட்​டுள்​ளது. அதேவேளை​யில் சென்​னையில் பிப்​ர​வரி 26-ல் நடை​பெறும் சூப்​பர் 8 ஆட்​டத்​துக்​கான டிக்கெட் விலை ரூ.2 ஆயிரம் முதல் தொடங்​கும் எனவும் ஐசிசி தெரி​வித்​துள்​ளது.

லீக் ஆட்டங்களுக்கும் குறைந்தபட்ச விலை

கொல்​கத்தா மற்​றும் அகம​தா​பாத்​தில் நடை​பெறும் சில லீக் ஆட்டங்​களுக்கு மட்​டும் டிக்​கெட் விலை குறைந்த பட்​சம் ரூ.100 என நிர்ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நடை​பெறும் சில ஆட்டங்களுக்கு குறைந்​த​பட்ச டிக்கெட் விலை ரூ.150 எனவும், முமபை​யில் நடை​பெறும் சில ஆட்​டங்​களுக்கு குறைந்​த​பட்ச டிக்கெட் விலை ரூ.250 எனவும்​ நிர்​ண​யித்​துள்​ளனர்​.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in